பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள்
சேமிப்பு என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால் ஒரு வீட்டில் இரண்டு நபர்கள் வேலைக்கு சென்றாலும் கூட அதில் ஒருவரின் சம்பளத்தை ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை மற்றும் கல்வி என அனைத்தினையும் ஆலோசனை செய்து அதற்கான ஒரு புதிய சேமிப்பை தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு எதில் பணத்தை சேமித்தால் நல்லது என்றும், அதிக வட்டி எது என்றும் சரியாக தெரிவது இல்லை. அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள பெண் குழந்தைகளுக்கான ஒரு அசத்தலான திட்டத்தை பற்றி தெரிந்துக்கொண்டு அதன் கீழ் சேமிக்க தொடங்கலாம் வாங்க..!
Sukanya Samriddhi Account Scheme:
பெண் குழந்தைகளுக்கு என்று அறிமுகம் செய்த திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்தினை செல்வமகள் சேமித்து திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
வயது தகுதி:
10 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகள் அனைவரும் போஸ்ட் ஆபீஸ் மற்றும் Nationality பேங்க் இந்த இரண்டில் எதில் வேண்டுமானாலும் நீங்கள் சேமிக்க தொடங்கலாம்.
டெபாசிட் தொகை:
இந்த செல்வமகள் சேமித்து திட்டத்தின் குறைந்தப்பட்ச தொகை 250 ரூபாய் மற்றும் அதிகப்பட்ச தொகை 1,50,000 ரூபாய் ஆகும்.
வட்டி விகிதம்:
செல்மகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமாக 8% வரை அளிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ ஒவ்வொரு 3 மாதமும் 30,000 பெறலாம்.. திட்டத்தின் முதிர்வு காலத்தில் Rs.7,00,000/- பெறும் திட்டம்..
முதிர்வு காலம்:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 21 வருடம் ஆகும். ஆனால் முதல் 15 வருடம் மட்டும் இதில் பணத்தை சேமித்தால் போதும் அதன் பின்பு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Selvamagal Scheme in Post Office Details 2023 Tamil:
போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எவ்வளவு ரூபாய் சேமித்தால் முதிர்வு காலம் முடிந்த பிறகு வட்டி தொகையுடன் சேர்த்து மொத்தமாக எவ்வளவு தொகையினை பெறலாம் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த டெபாசிட் தொகை | முதிர்வு கால தொகை |
1,000 ரூபாய் | 3,59,449 ரூபாய் | 1,80,000 ரூபாய் | 5,39,449 ரூபாய் |
5,000 ரூபாய் | 17,97,247 ரூபாய் | 9,00,000 ரூபாய் | 26,97,247 ரூபாய் |
10,000 ரூபாய் | 35,94,494 ரூபாய் | 18,00,000 ரூபாய் | 53,94,494 ரூபாய் |
12,500 ரூபாய் | 44,93,118 ரூபாய் | 22,50,000 ரூபாய் | 67,43,118ரூபாய் |
இந்த திட்டத்தில் சேரலாம் 👉👉 555 நாட்களில் Rs.11,22,491/- பெறும் அசத்தலான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |