Sukanya Samriddhi Yojana Scheme in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! நாம் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். இன்றும் சில சேமிப்பு போக மிச்சம் இருக்கும் பணத்தை தான் செலவு செய்கிறார்கள். அப்படி நாம் சிறுக சிறுக சேமித்தாலும் நாளடைவில் நாம் சேமித்த பணம் மட்டும் தான் இருக்கும். அதுவே அந்த பணத்தை போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நமக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.
அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பல சேமிப்பு திட்டங்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பெண் குழந்தைகளுக்கு அதிக வட்டி தரும் திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!
5 வருடத்தில் 6,00,000 பெரும் அருமையான 2 திட்டங்கள் மிஸ் பண்ணிடாதீங்க |
பெண் குழந்தைகளுக்கு அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டம்:
பொதுவாக நம் நாட்டில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் பெற்றோர்களுக்கு சந்தோசம் வருகிறதோ இல்லை கவலை வந்துவிடும். காரணம் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும் அல்லவா..! அதாவது ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால், அந்த குழந்தை பிறந்ததில் இருந்து அந்த குழந்தை வளர்ந்து திருமணம் ஆகி அதற்கு குழந்தை பிறக்கும் வரை செலவுகள் பெற்றோர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.
அதாவது பெண் குழந்தையின் திருமண செலவு, வளைகாப்பு செலவு, போன்ற பல செலவுகள் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு இருக்கும். அதனால் தான் பெண் குழந்தைகளுக்காக பல சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 39,44,600 ரூபாய் பெறும் திட்டம்
அப்படி இருக்கும் சேமிப்பு திட்டங்களில் முதலிடத்தில் இருக்கும் திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தை சுகன்யா சம்ரிதி சேமிப்பு திட்டம் என்றும் சொல்வார்கள். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். மேலும் செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்க யார் தகுதியானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 போஸ்ட் ஆபிஸில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க இவ்வளவு தகுதி வேண்டுமா
இந்த திட்டத்தில் 1 ஆண்டுக்கு குறைந்தபட்ச தொகையாக 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். மேலும் இந்த திட்டத்தில் வட்டி விகிதமானது ஆண்டிற்கு 7.6% வரை வழங்கப்டுகிறது.
இந்த திட்டத்தில் எந்த பெண்ணின் பெயரில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ அந்த பெண் உயர் கல்வி பயிலும் போது குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அதுபோல பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பிறகு, அந்த பெண்ணின் திருமணத்திற்காக குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அந்த பெண்ணிற்கு 21 ஆண்டுகள் கழித்து கணக்கு முடியும் பொழுது சேமிப்பில் உள்ள தொகை வட்டியுடன் வழங்கப்படும்.உதாரணத்திற்கு ஒரு நபர் தனது 3 வயது பெண் குழந்தைக்கு ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை செல்வமகள் திட்டத்தில் சேமிக்கிறார். 15 ஆண்டுகளுக்கு அவர் செலுத்திய தொகையானது 7,50,000 ரூபாயாக இருக்கும். அதுவே 21 ஆண்டுகளில் அவர் பெரும் வட்டியானது 13,71,718 ரூபாயும் முதிர்வுத் தொகையாக 21,21,718 ரூபாயும் கிடைக்கும்.
2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |