அரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி..!

tahdco Loan Scheme In Tamil

30% மானியத்துடன் தாட்கோ கடனுதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?  tahdco Loan Scheme..!

tahdco Loan Scheme In Tamil / தாட்கோ கடன் உதவி: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தாட்கோ அரசு நிறுவனத்தில் 30% மானியத்துடன் 7,50,000/- வரையிலும் கடனுதவி வழங்கி வருகிறார்கள். இந்த தாட்கோ அரசு வழங்கும் கடன் உதவியானது புதிதாக இடம் வாங்கும் நபர்களுக்கு லோன் வழங்குகிறார்கள். அடுத்ததாக சிறு குறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு, வாகனம் வாங்கி தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு, சுயமாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த கடன் உதவி கொடுக்கிறார்கள். குறிப்பாக இந்த கடனுதவியானது பெண்களுக்கு வழங்கி வருகிறார்கள். சரி வாங்க நண்பர்களே தாட்கோ அரசு வழங்கும் கடனுதவியினை எப்படி ஆன்லைன் மூலம் அப்ளை செய்து பெறலாம் என்ற முழு விவரங்களையும் தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

new7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!

இணையதள முகவரி:

tahdco Loan Scheme In Tamilமுதலில் http://application.tahdco.com/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

தாட்கோ கடன் பெற:

Step 1:

அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்றதும் அந்த பக்கத்தில் உள்ள “click here to apply” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

அவற்றில் உங்களுடைய caste, sub caste, பாலினம், மாவட்டம், நீங்கள் எதற்காக இந்த கடனுதவியினை பெறுகிறீர்களோ அந்த திட்டத்தின் பெயரினை குறிப்பிட வேண்டும்.

Step 2:

அடுத்து “Go To Fill Application” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவற்றை க்ளிக் செய்த பிறகு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், Project Report கொடுத்து இணைக்க வேண்டும்.

Step 3:

அடுத்து விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், சரியான முகவரி, வீட்டின் கதவு எண், கிராம பெயர், மாவட்ட பின் கோடு,  தொலைபேசி எண், வாக்காளர் பதிவு எண்(கட்டாயம் இல்லை), மின் இணைப்பு எண், மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, வயது, ஆதார் எண், மதம், ஆண்டு வருமானம், குடும்ப அட்டை எண், கல்வி தகுதி சான்றிதழ் அனைத்தையும் சரியாக கொடுக்க வேண்டும்.

கல்வி தகுதி சான்றிதழானது புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்கள் மட்டும் இணைக்க வேண்டும்.

Step 4:

அடுத்து விண்ணப்ப படிவத்தில் நிரப்ப வேண்டியவை இதற்கு முன் இந்த திட்டத்தில் கடனுதவி பெற்று உள்ளீர்களா என்ற விவரத்தினை குறிப்பிட வேண்டும்.

அடுத்து நீங்கள் ஏதேனும் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக இருந்தால் அதன் விவரத்தினை கொடுக்க வேண்டும்.

newமத்திய அரசு வீடு கட்டும் திட்டம்..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

Step 5:

அடுத்ததாக படிவத்தில் செய்ய போகும் தொழிலின் பெயர், தொழில் தொடங்க தேவையான தொகை மதிப்பீடு, புதிதாக கட்டிடம் கட்ட போகிறீர்கள் என்றால் அதன் மதிப்பீடு, இயந்திர உபகரணம், இதர செலவுகள், நடைமுறை மூலதனம் எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக தேவைப்படும் தொகையினை குறிப்பிட வேண்டும்.

Step 6:

அடுத்து விண்ணப்ப படிவத்தில் சுயமாக தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது என்றால் அதில் உங்களுடைய சொந்த முதலீட்டினை குறிப்பிட வேண்டும்.

அடுத்ததாக வேறேதும் வங்கியில் கடனுதவி பெற்று இருக்கீறீர்களா என்ற விவரங்கள் கொடுக்க வேண்டும். இதனுடைய மொத்த விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

Step 7:

எந்த வங்கியில் கடனுதவி பெற வேண்டுமோ அந்த வங்கியின் பெயர், கிளையின் பெயரில் விண்ணப்பதாரரின் போட்டோ அப்லோட் செய்ய வேண்டும்.

அதோடு முகவரி சான்று, சாதி சான்றிதழ் எண்(வழங்கபட்ட நாள்), வருமான சான்று, ஓட்டுநர் உரிமம் இருப்பவர்கள் அதன் விவரத்தினை கொடுத்து இந்த திட்டத்தில் சரியானவற்றை கொடுத்துள்ளேன் என்று அந்த கட்டத்தில் டிக் செய்த பிறகு கேப்ட்ச்சா எண்ணை கொடுத்து சம்மிட் ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.

Step 8:

சம்மிட் கொடுத்த பிறகு விண்ணப்பதாரர்களுக்கு Registration எண் கொடுப்பார்கள். நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பநிலையினை தெரிந்துக்கொள்வதற்கு Track Your Status என்ற ஆப்ஷனில் நீங்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

newபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil