அரசு மானியத்துடன் தாட்கோ திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படி?

Advertisement

தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம்..! TAHDCO Land Purchase Scheme in Tamil..!

TAHDCO subsidy: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ன் அரசு மானியத்துடன் தாட்கோ திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படி என்ற முழு விவரத்தினையும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் பழங்குடியினர் மட்டுமே இந்த திட்டத்திற்கு அப்ளை செய்து 5 ஏக்கர் நிலத்தினை வாங்கலாம். மேலும் இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்,  வயது தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..! 

newஅரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி..!

திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த திட்டமானது பெண்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பெண்கள் இல்லாத பட்சத்தில் மகன்கள் பெயரினில் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தொழில் விவரம்:

  • குறிப்பாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கப் போகும் விண்ணப்பதாரர்கள் விவசாயம் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
  • இல்லையென்றால் விவசாய கூலி வேலை செய்பவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.

முக்கிய விவரங்கள்:

  • அரசு மானியத்துடன் தாட்கோ திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் எந்த கடன் தொகையும் தாட்கோ திட்டத்தில் பெற்றிருக்க கூடாது.
  • குடும்பத்தில் இந்த திட்டத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
சதுர அடி கணக்கிடுவது எப்படி

திட்டத்தின் நிபந்தனைகள்:

Tahdco Subsidy in Tamil:

  • அரசாங்கமானது நிலத்திற்குரிய தொகையினை மட்டுமே உங்களுக்கு வழங்கப்படும். உங்களுக்கு தேவைப்படும் நிலத்தின் ஏக்கர் கணக்கினை நீங்கள் தான் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
  • நிலத்தின் ஏக்கரினை உறுதி செய்த பிறகு இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கவும்.
  • முக்கியமாக இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் SC/ST பிரிவை சார்ந்த நபர்களாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் வாங்கும் நிலத்தினை விற்கக்கூடியவர்கள் SC/ST நபர்களாக இருக்க கூடாது.
new7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..!

நிலம் அளவு:

  • இந்த திட்டத்தில் முதன் முதலாக இணையக்கூடிய நபர்கள் அதாவது உங்களிடம் நிலமே இல்லாதவர்கள் அதிகமாக 2 1/2 ஏக்கர் அளவு நிலம் வாங்கலாம்.
  • 2 1/2 ஏக்கர் அளவிற்கு நன்செய் நிலமும், 5 ஏக்கர் புன்செய் நிலமும் வாங்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேவைப்படும் முக்கிய ஆவணம்:

  • பத்திர பதிவு ஆபிஸிற்கு சென்று அல்லது பத்திர பதிவு இணையதளத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் நிலத்தினுடைய வழிகாட்டி மதிப்பினை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
  • அந்த ஆவணம் இருந்தால், இந்த திட்டத்தில் சுலபமாக விண்ணப்பித்து நிலம் வாங்கலாம்.

திட்டத்தின் நோக்கம்:

  • இந்த திட்டத்தின் மூலம் நிலம் வாங்கி 20 ஆண்டுக்குள் மற்றவர்களிடம் நிலத்தினை விற்க கூடாது.
  • 20 வருடம் பிறகு நிலத்தினை வேண்டியவர்களிடம் விற்றுக்கொள்ளலாம். 20 ஆண்டுகள் வரை உங்களுடைய பெயரில் தான் நிலமானது இருக்க வேண்டும்.

பத்திர விவரம்:

  • பெண்களுடைய பெயரில் நிலம் வாங்குகிறீர்கள் என்றால் பெண்களின் பெயரில் பத்திரம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • கணவன், மகன், மகள் பெயரினில் கூட பத்திரம் இருக்கலாம்.
  • குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் மட்டுமே பத்திர பதிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement