வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதந்தோறும் 1500 ரூபாய் ஊக்கத்தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Updated On: September 1, 2025 4:28 PM
Follow Us:
Tamil Language Literary Aptitude Test 2025
---Advertisement---
Advertisement

Tamil Language Literary Aptitude Test 2025

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடம் நன்றாக வரும். மற்ற பாடங்களில் கொஞ்சம் திணறுவார்கள். அதுவே மெட்ரிகுலேசனில் படிப்பவர்களுக்கு தமிழை தவிர மற்ற பாடங்கள் நன்றாக வரும். மாணவர்களை தமிழ் மொழியில் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆனது தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு தேர்வு இயக்ககம் மூலம் நடத்தப்படுகிறது. 

இந்த தேர்வு ஆனது வருடத்திற்க்கு ஒரு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025-26-ம் ஆண்டிற்கான தேர்வை வெளியிட்டுள்ளது. தேர்வு எப்போது. அதற்கான தகுதி,  ஊக்கத்தொகை எவ்வளவு போன்ற விவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

தகுதி மற்றும் ஊக்கத்தொகை 

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளி யிலும் உள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். 

இந்த தேர்வில் சிறந்து விளங்கும் 1500 மாணவர்களை தேர்ந்த்டுப்பார்கள். இதில் 50% அரசு பள்ளி மாணவர்களும், 50% தனியார் பள்ளி மாணவர்களையும் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் என்று 2 வருடத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 

தேர்வு பாடங்கள்:

இந்த ஆண்டு புதிய 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தி;இருந்து கேள்விகள் கேட்கப்படும். தற்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்த ஆண்டில் 10-ம் வகுப்பு பாடத்திலிருந்து சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம், இயல் 6-ல் உள்ள முத்தொள்ளாயிரம் மற்றும் இயல் 7-ம் உள்ள அக்கறை ஆகிய 4 தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறாது. மீதமுள்ள பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?

தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு ஆனது அக்டோபர் மாதம் 11.10.2025 அன்று தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின் அதில் விண்ணப்ப பார்மை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இந்த பார்மை பூர்த்தி செய்து விண்ணப்ப தேர்வு கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். இதனை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதனை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • மாணவரின் போட்டோ 
  • EMIS எண் 
  • மாணவரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, வகுப்பினம், தந்தை பெயர், தொலைபேசி எண்,
  • பள்ளியின் பெயர் மற்றும் முகவரி 
  • மாணவரின் இருப்பிட முகவரி 
  • மாணவரின் கையெழுத்து 
  • பெற்றோர் கையெழுத்து 
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now