போஸ்ட் ஆபீஸ் டயம் டெபாசிட் ஸ்கீன் விவரம் – Time Deposit in Post Office Interest Rate
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் அஞ்சல் துறையில் வழங்கக்கூடிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான டயம் டெபாசிட் ஸ்கீமை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த டயம் டெபாசிட்டிற்கு எவ்வளவு வட்டி தற்பொழுது வழங்கப்படுகிறது, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும். இதனுடைய மெச்சுரிட்டி காலம் எவ்வளவு ஆண்டுகள் போன்ற முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
டயம் டெபாசிட் ஸ்கீம்:
போஸ்ட் ஆபிஸ் பொறுத்தவரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து விதமான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி மைத்துக்கொண்டே இருப்பார்கள், அந்த வகையில் டயம் டெபாசிட் ஸ்கீமிற்கு அக்டோபர் 01 தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தற்பொழுது வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளனர் ஆக இந்த கால கட்டத்தில் யாரெல்லாம் டயம் டெபாசிட்டில் முதலீடு செய்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த வட்டி விகிதம் பொருந்தும்.
டயம் டெபாசிட் என்பது வேறு ஒன்றும் இல்லை வங்கிகளில் நாம் பிக்சட் டெபாசிட் செய்வது போல், போஸ்ட் ஆபிசில் டயம் டெபாசிட் என்று வழங்கப்படுகிறது.
ஆக நீங்கள் லாம்சமாக ஒரு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்து, அதற்கு வழங்கப்படும் வட்டியை வருடத்திற்கு ஒருமுறை பெற்று கொள்ளலாம்.
இந்த டயம் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு அஞ்சல் துறையில் நான்கு வகையான மெச்சுரிட்டி காலங்கள் வழங்குகின்றன. அவை ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் என்று வழங்கப்படுகிறது. இவற்றில் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்குமோ அதனை தேர்வு செய்து நீங்கள் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 மாதத்திற்கு ஒரு முறை வட்டி மட்டும் 9,250 வழங்க கூடிய அருமையான ஸ்ச்ஸ் திட்டம்…
டயம் டெபாசிட்டிருக்கு வழங்கப்படும் வட்டி:
1 வருடம் | 6.9% |
2 வருடம் | 7.0% |
3 வருடம் | |
5 வருடம் | 7.5% |
அஞ்சல் துறை டயம் டெபாசிட் ஸ்கீமில் 2 வருடத்திற்கு எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | இரண்டு வருடத்திற்கு வழங்கப்படும் வட்டி |
10,000 | 1,436 |
25,000 | 3,592 |
50,000 | 7,184 |
1,00,000 | 14,370 |
3,00,000 | 43,114 |
10,00,000 | 1,43,718 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் மாதம் 3,000 ரூபாய் சேமித்தால் 16,16,288/- SSA திட்டம்..!
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |