போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2023
எதிர்கால வாழ்க்கையினை பற்றி சிந்திக்கும் அனைத்து நபர்களுக்கும் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார வாழ்க்கையினை ஒப்பிட்டு பார்க்கும் போதும் பணம் என்பது வருங்காலத்தில் அதிகளவு அத்தியாவசியமான ஒன்றாக இருக்க போகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் சேமித்து வைக்கும் பணமானது பெரிய அளவில் பயன்படவில்லை என்றாலும் நம்முடைய தேவைகளில் ஏதாவது ஒன்றினையாவது பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். இவ்வாறு இருக்கையில் நாம் சேமித்து வைக்கும் பணத்தினை ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் வங்கியிலோ அல்லது தபால் துறையிலோ சேமித்து வைத்தால் குறிப்பிட்ட அளவு அதிகமான தொகையினை பெற முடியும். ஆகையால் இன்று போஸ்ட் ஆபீஸில் உள்ள ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Time Deposit Scheme in Post Office 2023:
தபால் துறையில் உள்ள திட்டத்தினங்களின் ஒன்றான Time Deposit திட்டத்தினை பற்றி எவ்வளவு ரூபாய் முதலீட்டில் எப்படி சேமிக்க வேண்டும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயது தகுதி:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த Time Deposit திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமக்களும் சேரலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் தனியாகவோ அல்லது மூன்று நபர் சேர்த்து Join ஆகவோ சேர்ந்து சேமிக்க தொடங்கலாம்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 1,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை என்றால் நீங்கள் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்👇👇
1800 சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்..
வட்டி விகிதம்:
போஸ்ட் ஆபீசில் அறிமுகம் செய்து உள்ள இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதமாக 7% வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் இதற்க்கான வட்டி விகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கான வட்டி விகிதம் வழங்கப்டும்.
1 வருடம் | 2 வருடம் | 3 வருடம் | 5 வருடம் |
6.8% | 6.9% | 7 % | 7.5% |
முதிர்வு காலம்:
இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் ஆகும்.
இத்திட்டத்தில் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:
மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி நீங்கள் 6 லட்சம் ரூபாயினை 5 வருட கால அளவில் நீங்கள் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலீடு தொகை | வட்டி விகிதம்% | முதிர்வு காலம் | மொத்த வட்டி தொகை % | மொத்த தொகை |
6 லட்சம் ரூபாய் | 7.5% | 5 வருடம் | 2,69,000 ரூபாய் | 8,69,000 ரூபாய் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |