மலிவான விலையில் LED பல்புகளை வழங்கும் உஜாலா திட்டம்..!

Advertisement

மலிவான LED பல்புகளை வழங்கும் உஜாலா திட்டம்..! | Ujala Scheme Details in Tamil

இந்திய அரசு கிராமப்புறப் பகுதிகளில் விலை மலிவான LED பல்புகளை வழங்குவதற்கான கிராம உஜாலா திட்டத்தினை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்த நோக்கம், இலக்கு மற்றும் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக நாம் படித்து தெரிந்துகொள்வோம்.

உஜாலா யோஜனா நோக்கம்:ujala schem

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், என்னவென்றால் மின்சார சிக்கனமுள்ள விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் மின்சிக்கனமுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின்கட்டணச் செலவைக்குறைத்து அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் துணைபோவதும் தான்.

இலக்குகள்

  • 20 கோடி சாதாரண பல்புகளை மாற்றி, (LED) பல்புகள் வழங்குவது.
  • ஆண்டு ஒன்றுக்கு சுமார் 105 கோடி கிலோ வாட் மின்சாரத்தைச் சேமிப்பது.
  • மின்சார நிலையங்களின் உற்பத்தியில் சுமார் 5000 மெஹாவாட் குறைப்பது.
  • நுகர்வோரின் மின்கட்டணச் செலவில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடியைக் குறைப்பது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 14 லட்சம் லாபம் தரும் சேமிப்பு திட்டம்..!

செயல்படுத்தும் முகமைகள்:

மின்சார விநியோக நிறுவனங்களும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனமும் (EESL) இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

வீட்டில் மீட்டர் பொருத்தப்பட்ட மின்சார இணைப்பு கொண்ட அனைத்து குடும்பத்தினரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் EMI முறையில் LED விளக்குகளை வாங்கிக் கொள்ளலாம். முழுத் தொகையையும் கொடுத்து வாங்கும் வசதியும் உள்ளது. LED பல்புகள் விநியோகம் செய்யப்பட்ட நகரங்களை அறிய  http://ujala.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LED பல்புகளை பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • சமீபத்தில் மின் கட்டணம் செலுத்திய ரசீது நகல்
  • புகைப்பட அடையாளச் சான்று
  • முகவரிச்சான்று (மின்கட்டண ரசீதில் உள்ள படி)
  • மாதாந்திரத் தவணையில் (பின்னர் வரும் மின்கட்டணத்துடன் சேர்த்து மாதாமாதம் வசூலிக்கப்படும்) பெறுவது என்றால் முதல் தவணை முன்பணம். மாதாந்திரத் தவணை இல்லாமல் மொத்தமாக ஒரே தடவையிலும் பணம் கொடுத்து LED பல்பு பெற்றுக்கொள்ளலாம். ஓரே தடவையில் பணம் கொடுத்தால் முகவரிச்சான்று வேண்டியதில்லை.

வீடுகளில் LED பல்புகளை பயன்படுத்துவதற்கான உச்ச வரம்பு:

உஜாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது இரண்டு (LED) பல்புகள் முதல் அதிகபட்சம் 10 பல்புகள் வரை மானிய விலையில் தரப்படும். சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் 5–6 பல்புகள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிய வந்துள்ளது.

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது:

  • அரசாங்கத்தின் மூலம் இத்திட்டத்திற்கு மானியம் வழங்கப்படுவதில்லை.
  • மின்கட்டண விகிதமும் மாறுவதில்லை.
  • ஆனால், எரியாற்றல் திறன் சேவைகள் நிறுவனம், LED பல்புகளை 40 சதவிகித விலைக்குத் தருகிறது.
  • நுகர்வோருக்கு மின் கட்டணம் குறைகிறது.
  • அரசுக்கு மின் உற்பத்தி முதலீட்டுச் செலவு குறைகிறது.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெரும் அஞ்சலகத்தின் அசத்தலான திட்டம்..!

தமிழகத்தின் நிலை:

தமிழகத்தைப் பொறுத்தவரையில், உஜாலா திட்டத்தின் கீழ் இதுவரையில் 43,62,984 LED பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 5,66,608 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதோடு, ரூ.227 கோடி மிச்சமாகிறது.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement