தமிழக அரசு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்குகிறது..!யாரெல்லாம் பயன் அடையலாம்..

Advertisement

Unemployment Scholarship in Tamil

தமிழக அரசின் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயன் பெரும் வகையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதிகள், ஆவணங்கள் பற்றி முழு தகவலையும் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

TN Unemployment Scholarship  in Tamil:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நேரடி பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவும் நோக்கில் வேலைவாய்ப்பின்மை உதவித் திட்டம் தொடங்கப்பட்டது.

வயது வரம்பு மற்றும் வருமானம் போன்ற தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு வேலையின்மை உதவியை அரசாங்கம் வழங்குகிறது.

மாணவர்களுக்கான கல்வி கடன் நீங்களும் பெறலாம்..!

தகுதி:

SC| ST வகுப்பினர் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் அதிகபட்சமாக 72,000 ரூபையாக இருக்க வேண்டும்.

மாற்று திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வரம்பு கிடையாது.

OAP பெறுபவர்களாக இருந்தால் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.

விண்ணப்பதாரர் எந்த  நிறுவனத்திலும் வேலை பார்த்து சம்பளம் வாங்குபவராக இருக்க கூடாது.

கல்லூரி ஆண்டில் உதவி தொகை பெற்றவர், Engineering, Agriculture, Law Degree படித்தவர்களுக்கு இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.

உதவி தொகை:

10th Fail – Rs.200/-
10th Pass – Rs.300/-
12th Pass – Rs.400/-
Degree Pass – Rs.600/-

மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை:

10th Pass – Rs.600/-
12th Pass – Rs.750/-
Degree Pass – Rs.1000/-

ஆவணங்கள்:

  1. ஆதார் அட்டை
  2. வங்கி கணக்கு அட்டை
  3. வருமான சான்று
  4. சாதி சான்று
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம்  Click Here 
மாற்று திறனாளிகள் உதவி தொகை திட்டம்  Click Here 

 

கல்வி உதவித் தொகை பெற உதவும் பயனுள்ள இணையதளங்கள்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement