இல்லம் தேடி கல்வி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் | Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadi

how to apply for illam thedi kalvi scheme online tamil

இல்லம் தேடி கல்வி திட்டம் என்றால் என்ன | Veedu Thedi Kalvi Thittam Apply Online in Tamil

அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு தேவையான அடைப்படை விஷயங்களையும் செய்து தருகிறது தமிழக அரசு. அந்த வகையில் தமிழக முதமைச்சர் இந்த கொரோனா காலத்தில் பள்ளி குழந்தைகள் பாதி நாட்கள் வீட்டில் இருந்தார்கள். சில காலம் ஆன்லைன் மூலம் அல்லது தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்று வந்தார்கள். அவர்களின் கல்வி நலன் குறைந்துள்ளது என பெற்றோர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வருத்தத்தை போக்கும் வகையிலும் குழந்தைகளின் கல்வி தரம் அதிகம் ஆகும் வகையிலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் அவர்கள். அந்த திட்டத்தில் எப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் என்பதை இப்போது இந்த பதிவில் மூலம் தெளிவாக காண்போம் வாங்க.

தமிழக முதல்வரின் இல்லம் தேடி கல்வி திட்டம் 2022

வீடு தேடி கல்வி திட்டம்:

 • குழந்தைகளின் கல்வி நலனின் அக்கறை காட்டும் விதமாக இந்த இல்லம் தேடி கல்வி திட்டம். இந்த திட்டத்தில் சேர்வதற்கு இதுவரை தன்னலர்வளார்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் சேர்வதற்கான கல்வி தகுதி 12 வகுப்பு படித்தவர்கள் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்று தரலாம். மேலும் டிகிரி படித்திருக்க வேண்டும்.
 • வாரத்திற்கு ஆறு மணி நேரம் குழந்தைகளுக்கு கல்வி கற்று தர தயாராக இருக்க வேண்டும். மற்றும் பகுதி நேரமாகவும் பணி புரிய தயாராக இருக்க வேண்டும்.
 • குழந்தைகளுடன் பேசும் போது தமிழில் பேசுவது அவசியம். கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
 • தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் அதிக அளவு கற்று தர வேண்டும். அதற்கான உபகரணங்கள் வழங்கப்படும்.
 • யாருடைய கட்டமாக இல்லாமல் தனி முயற்சியின் முனைப்பாக இத்திட்டத்தில் சேர வேண்டும். சேரும் நபர்களின் வயது தகுதி 17 வயது நிரம்பி இருத்தல் வேண்டும்.

இல்லம் தேடி கல்வி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்:

ஸ்டேப்:- 1

இல்லம் தேடி கல்வி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

 • illamthedikalvi.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதில் கீழ் கொடுக்கப்பட்ட தன்னலர்வர்களுக்கான பதிவேற்ற படிவத்தை தொடங்கு என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்:- 2

Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadi

 • மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் ஒரு பக்கம் வரும் அதில் கேட்ட பட்டிருக்கும் அனைத்தையும் உள்ளிடவும்.
 • முதலில் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், அலைபேசி எண், வாட்சப் எண், மின்னஞ்சல் Email ID, ஆதார் எண் போன்ற விவரங்களை விண்ணப்பிக்கவும்.

ஸ்டேப்:- 3

Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadi

 • மூன்றாவதாக மேல் உள்ளதை விண்ணப்பித்த பிறகு கீழ் உங்கள் முகவரி என்று இருக்குக் அதனை கிளிக் செய்தால் அதில் மேலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் வரும். அதில் மாவட்டம், வட்டாரம், கிராமம் அல்லது வார்டு, உள்ளாட்சி அமைப்பு, உங்கள் முகவரி, அஞ்சல் குறியீடு எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.

ஸ்டேப்:- 4

Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadi

 • பின் உங்கள் முகவரியை உள்ளிட்ட பிறகு கீழ் கல்வி மற்றும் தொழில் விவரம் என்பதை கிளிக் செய்தால் மேலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் உங்களுக்கு காணப்படும். அதில் நீங்கள் பயின்ற கல்வி, பணி புரிபவராக இருந்தால் அதனை போட்டுக்கொள்ளவும்.

ஸ்டேப்:- 5

Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadi

 • அடுத்து இதர கேள்விகள் என்பதை கிளிக் செய்யவும். அதில் மேல் கொடுக்கப்பட்ட படத்தை போல் வரும்.

ஸ்டேப்:- 6

Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadi

 • நீங்கள் முழு நேரம் என்றால் கானை கிளிக் செய்யவும். அப்படி இல்லை என்றால் பகுதி நேரம் என்றால் அதில் மேல் கொடுக்க பட்ட படத்தில் உள்ளது போல் காணப்படும். அதில் வாரத்திற்கு ஒரு முறையா, மாதத்திற்கு ஒரு முறையா, இரு வாரங்களுக்கு ஒரு முறையை என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

ஸ்டேப்:- 7

Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadi

 • தேர்வு செய்த பின் மேலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் காணப்படும். அதில் நீங்கள் தடுப்பு ஊசி போட்டவராக என்பதை கிளிக் செய்யவும். அதில் முதல் தடுப்பு ஊசி போட்டவர், இரண்டாம் தடுப்பு ஊசி போட்டவர். தடுப்பூசி போடாதவர் என மூன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் எதை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப்:- 8

 • Veedu Thedi Kalvi Thittam Online Apply Seivathu Eppadiமேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் மேல் கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மை என்பதை கிளிக் செய்துகொண்ட பிறகு submit கொடுக்கவும். அதன் பின் உங்களுக்கு உங்களுடைய application நம்பர் காணப்படும் அதனை எடுத்து வைத்துக்கொள்ளவும். மேல் அதிகாரிகள் உங்களுடைய அலைபேசிக்கு போன் செய்து உங்களுடைய விவரங்களை தெரிந்து கொள்வார்கள். பிறகு உங்கள் வேலையை பற்றி உங்களுக்கு தெளிவாக சொல்வார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Useful Information In Tamil