TD Interest Rate in Post Office 2023
டைம் டெபாசிட் திட்டம் என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் ஒவ்வொரு தனிநபருக்கு சேர்த்து பயனடையலாம். இந்திய நிதி அமைச்சகம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் திட்டத்தின் வட்டி விகிதங்களை மாற்றுகிறது. எனவே அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான டைம் டெபாசிட் வட்டி விகிதங்கள் என்னெவென்று இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக நாம் பணத்தை சேமிக்கும் திட்டங்களின் வட்டி விகிதத்தினை ஒவ்வொரு ஆண்டும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது வட்டி விகிதம் குறைந்துள்ளதா.? அதிகரித்துள்ளதா.? போன்ற விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். எனவே இப்பதிவின் வாயிலாக அஞ்சல் துறையின் டைம் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதம் மற்றும் பிற விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Time Deposit Scheme in Post Office 2023 in Tamil:
இத்திட்டத்தில் நீங்கள் ஒரு முறை டெபாசிட் செய்து டெபாசிட் செய்த காலத்திற்கு ஏற்றவாறு வட்டியினை பெறலாம்.
வட்டி விகிதம்:
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யும் காலத்திற்கு ஏற்றவாறு வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
டெபாசிட் காலம் | வட்டி விகிதம் |
1 ஆண்டு | 6.9% |
2 ஆண்டுகள் | 7% |
3 ஆண்டுகள் | 7% |
5 ஆண்டுகள் | 7.5% |
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும்..?
கணக்கு வகை:
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தனிநபர் கணக்காகவோ அல்லது ஜாயிண்ட் கணக்காகவோ திறக்கலாம்.
டெபாசிட் தொகை:
இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகை ஆனது 200 இன் மடங்குகளிலே இருக்க வேண்டும்.
டெபாசிட் காலம்:
- 1 ஆண்டு
- 2 ஆண்டுகள்
- 3 ஆண்டுகள்
- 5 ஆண்டுகள்
தகுதிகள்:
இந்தியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.
10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மைனர் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் இத்திட்டத்தில் சேரலாம்.
18 வயதுடையவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், அவர்கள் பெயரிலே இத்திட்டத்தில் கணக்கை திறக்கலாம்.
இத்திட்டத்தில் 5 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு பெறலாம்.?
கால அளவு | டெபாசிட் தொகை | வருடாந்திர வட்டி தொகை | கிடைக்கக்கூடிய மொத்தத்தொகை |
5 ஆண்டுகள் | 1 லட்சம் | 44,829 | 1,44,829 |
5 ஆண்டுகள் | 2 லட்சம் | 89,659 | 2,89,659 |
5 ஆண்டுகள் | 3 லட்சம் | 1,34,489 | 4,34,489 |
5 ஆண்டுகள் | 4 லட்சம் | 1,79,319 | 5,79,319 |
5 ஆண்டுகள் | 5 லட்சம் | 2,68,978 | 8,68,978 |
தபால் துறையில் 5 வருடத்தில் 14 லட்சம் வரை அளிக்கும் சூப்பரான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |