Which Has Higher Interest Than Fixed Deposits in Tamil
வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை என்பது வரும். அப்போது நாம் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கடன் வாங்குவோம். ஆனால் இப்படி மற்றவர்களிடம் கடன் வாங்காமல் நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்தால் அது நமக்கு கஷ்டமான காலத்தில் உதவும். ஆனால் நாம் பணத்தை வீட்டில் சேமித்து வைப்பதால் எந்த பயனும் இல்லை. அதனால் தான் மக்கள் அனைவரும் இன்று போஸ்ட் ஆபிஸ், வங்கி போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி செய்வதால் நமக்கு பிற்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். அதுபோல அரசு நமக்காக பல சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதை நாமும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பிக்சட் டெபாசிட்டை (FD) விட அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
FD -யை அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள்:
பொதுவாக நம்மில் பலரும் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். காரணம் இதில் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது. ஆனால் FD திட்டங்களில் வழங்கப்படும் அதிக வட்டி விகிதத்தை விட, மத்திய அரசு வழங்கும் சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டியை வழங்குகின்றன. அது என்ன திட்டம் என்று இங்கு காணலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம்:
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் டெபாசிட் செய்யப்படும் எந்த தொகைக்கும், ID சட்டம், 1961 -ன் கீழ் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம் |
கிசான் விகாஸ் பத்ரா (KVP):
இது இந்திய அஞ்சல் அலுவலகத்தின் ஃபிக்ஸட்-ரேட் சிறு சேமிப்பு திட்டமாகும். இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டமானது அரசால் ஆதரிக்கப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இது சான்றிதழ்களாகவும் வாங்க கிடைக்கிறது. மேலும் இதில் முதலீடு செய்பவரின் பணம் இரட்டிப்பாக கிடைக்கும். இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் சான்றிதழ்கள் தற்போது சில பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்கள் மூலம் கிடைக்கின்றன. அதுபோல இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (NSC):
இந்திய அஞ்சல் அலுவலகம் வழங்கும் மற்றொரு சிறப்பான சிறு சேமிப்புத் திட்டம் தான் இந்த National Savings Certificate திட்டமாகும். இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டமானது 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Rs.79/- சேமித்தால் 10 லட்சம் தரும் திட்டம்
பொது வருங்கால வைப்பு நிதி (PPF):
இது இந்திய அரசின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டமானது ஆபத்தில்லா வருமானம் வழங்குகிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் உயர் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. PPF திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதிர்வு காலம் 15 ஆண்டுகள். அதேபோல குறைந்தபட்ச முதலீட்டு தொகை 500 முதல் அதிகபட்சம் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
777 நாட்களில் 3,93,000 ரூபாய் கிடைக்கக்கூடிய இந்த அசத்தலான திட்டம் பற்றி தெரியுமா
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |