போஸ்ட் ஆபீஸ் உள்ள TD Vs MIS இரண்டு திட்டத்தில் எது சிறந்தது.? நீங்கள் எதில் சேமித்தால் பயன்பெறலாம் தெரியுமா..?

which is better mis or td in post office scheme in tamil

Which is Better MIS or TD in Post Office Scheme 

நமக்கு ஓரளவு விவரம் தெரிந்த நாள் முதல் போஸ்ட் ஆபீஸில் நிறைய வகையான புது புது திட்டங்கள் வந்து உள்ளது. அத்தகைய திட்டங்களில் நாம் முழுமையாக பயன்பெறவில்லை என்றாலும் கூட ஓரளவு பயன் அடைந்து கொண்டு தான் உள்ளோம். ஆனால் நாம் சேமிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதனை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் அதில் இருக்கும் சில விஷயங்கள் நமக்கு தெரிய வரும். அதுமட்டும் இல்லாமல் அவற்றில் எதில் முதலீடு செய்தால் நல்லது என்றும் புரிய வரும். ஆகவே இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள TD Vs MIS இந்த இரண்டு சேமிப்பு திட்டங்களில் எது சிறந்தது என்று பார்க்கப்போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் போதும் 67,750 ரூபாய் பெறக்கூடிய திட்டம்..  

போஸ்ட் ஆபீஸ் TD Vs MIS சேமிப்பு திட்டத்திற்கு இடையே உள்ள வேறுபாடு:

Post Office Scheme Rules  Monthly Income Scheme Time Deposit Scheme
முதலீடு தொகை மாதந்தோறும் 1000 ரூபாய்  மாதந்தோறும் 1000 ரூபாய் 
வட்டி தொகை% இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்கப்படும். இதில் வருடத்திற்கு ஒரு முறை வட்டிக்கான தொகை சேர்த்து வழங்கப்படும்.
வயது தகுதி 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம்.
வட்டி விகிதம்% 7.1% 
  • 1 வருடம்- 6.60%
  • 2 வருடம்- 6.80%
  • 3 வருடம்- 6.90%
  • 5 வருடம்- 7%
முதிர்வு காலம் போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்தில் முதிர்வு காலம் ஆனது 5 வருடம் ஆகும். டைம் டெபாசிட் சேமிப்பு திட்டத்தில் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் என நான்கு வகையான முதிர்வு காலங்கள் உள்ளன.
அதிகபட்ச தொகை 4.5 லட்சம் ரூபாய் ஆகும். இத்திட்டத்தில் அதிக பட்ச தொகை என்பதே கிடையாது. உங்களுக்கு விருப்பம் உள்ள தொகையினை சேமிக்கலாம்.
பாதியில் கணக்கை முடித்தல் இதில் நீங்கள் 1 அல்லது 3 வருடத்திற்கு பிறகு கணக்கை முடித்து கொள்ளலாம். ஆனால் அதற்கு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். நீங்கள் இதில் 60 மாதத்திற்கு பிறகு கணக்கை வேண்டுமானால் முடித்து கொள்ளலாம். இதில் எந்த தொகையும் பிடித்தல் செய்யப்பட மாட்டாது.

 

TD Vs MIS இரண்டு  சேமிப்பு திட்டத்திலும் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:

மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி நீங்கள் 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை முதலீடு செய்தால் எவ்வளவு தொகை வட்டியாக கிடைக்கும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலீடு செய்த தொகை  Monthly Income Scheme Time Deposit Scheme
மாதாந்திர வட்டி தொகை  மொத்தவட்டி தொகை   வருடாந்திர வட்டி தொகை மொத்த வட்டி தொகை
1 லட்சம் 591 ரூபாய் 35,500 ரூபாய் 7,185 ரூபாய் 35,929 ரூபாய்
2 லட்சம் 1,183 ரூபாய் 71,000 ரூபாய் 14,371 ரூபாய் 71,858 ரூபாய்
3 லட்சம் 1,775 ரூபாய் 1,06,500 ரூபாய் 21,557 ரூபாய் 1,07,788 ரூபாய்
4,50,000 ரூபாய் 2,662 ரூபாய் 1,59,750 ரூபாய் 32,336 ரூபாய் 1,61,682 ரூபாய்

 

இந்த இரண்டில் Time Deposit Scheme ஆனது சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம்.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil