Which is Better NSC or FRSB
இன்றைய காலத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேமிக்க வேண்டும் என்று அதற்க்கான பணத்தினை ஒதுக்கி வருகிறார்கள். ஆனால் அந்த பணத்தை இதன் கீழ் எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று யாருக்கும் தெரிவது இல்லை. அந்த வகையில் பார்த்தோம் என்றும் போஸ்ட் ஆபீஸில் உள்ள அனைத்து திட்டங்களுக்கும் அதிகப்படியான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அதேபோல வங்கிகளில் உள்ள திட்டங்களுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் இரண்டு திட்டங்களிலும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எனவே இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸில் உள்ள NSC திட்டம் மற்றும் ரிசர்வ் வங்கி FRSB திட்டம் இரண்டில் எந்த திட்டம் சிறந்தது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
போஸ்ட் ஆபீஸ் NSC Vs FRSB இரண்டு திட்டத்தில் எது சிறந்தது:
Post Office NSC Scheme 2023:
போஸ்ட் ஆபீஸில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் இந்திய குடியுரிமை பெற்று 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் உங்களுடைய ஊரில் உள்ள போஸ்ட் ஆபீசில் சேர்ந்து பயன்பெறலாம்.
இந்த திட்டத்திற்கான குறைந்தப்பட்ச தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகப்பட்ச தொகை என்றால் 1000 ரூபாய்க்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தி சேமிக்க தொடங்கலாம்.
NSC திட்டத்திற்கான வட்டி தொகையாக 7.70% வழங்கப்படுகிறது. அதுபோல இந்த திட்டத்தில் லோன் பெரும் வசதி ககிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். ஆகையால் இந்த திட்டத்தில் 5 வருடம் முடிந்த பிறகு உங்களுடைய டெபாசிட் தொகை மற்றும் வட்டி தொகை இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்⇒ 2023 ஆண்டில் 1000 ரூபாய் சேமித்தால் 1,00,000 பெறலாம்
Reserve Bank FRSB Scheme 2023:
ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து உள்ள இத்தகைய திட்டத்தில் ஆனது உங்களுடைய ஊரில் உள்ள Nationality பேங்கில் மட்டும் தான் ஓபன் செய்ய முடியும்.
இந்த திட்டத்திற்கான குறைந்தப்பட்ச தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகப்பட்ச தொகை உங்களால் முடிந்த எவ்வளவு தொகையினை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதமாக 7.35% வரை வழங்கப்ப்படுகிறது.
மேலும் FRSB திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 7 வருடம் ஆகும். அதேபோல உங்களுடைய முதலீடு தொகைக்கு ஏற்ற வட்டி தொகை ஒவ்வொரு 6 மாதமும் அளிக்கப்படும்.
அதேபோல இந்த திட்டத்தில் உங்களுக்கு லோன் பெரும் வசதியும் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் கணக்கை பிரீமிச்சுவர் ஆகா முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகளுடன் இந்த வசதியினை அளிக்கிறது.
1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
Post Office NSC Scheme | |||
டெபாசிட் தொகை | முதிர்வு காலம் | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
1 லட்சம் ரூபாய் | 5 வருடம் | 44,903 ரூபாய் | 1,44,903 ரூபாய் |
5 லட்சம் ரூபாய் | 5 வருடம் | 2,22,517 ரூபாய் | 7,24,517 ரூபாய் |
Reserve Bank FRSB Scheme | ||||
டெபாசிட் தொகை | முதிர்வு காலம் | 6 மாத வட்டி தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
1 லட்சம் ரூபாய் | 7 வருடம் | 3,675 ரூபாய் | 51,450 ரூபாய் | 1,51,450 ரூபாய் |
5 லட்சம் ரூபாய் | 7 வருடம் | 18,375 ரூபாய் | 2,57,250 ரூபாய் | 7,57,250 ரூபாய் |
ஆகவே இரண்டு திட்டத்தினை ஒப்பிட்டு பார்க்கும் போது டெபாசிட் தொகை மற்றும் வட்டி தொகை இரண்டையும் ஒன்றாக பெறுவதற்கு NSC திட்டம் சிறந்தது, அதுவே 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி தொகையினை பெற வேண்டும் என்றால் அதற்கு FRSB திட்டம் தான் நல்லது.
இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் போஸ்ட் ஆபீஸில் செலுத்தினால் 2,00,000 ரூபாய் பெறக்கூடிய அதிசய திட்டம்…
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |