போஸ்ட் ஆபீஸ் மற்றும் SBI மாத வருமான திட்டத்தில் எது சிறந்தது எதில் அதிக லாபம் பெறலாம்

Advertisement

Post Office MIS vs SBI MIS

நண்பர்களுக்கு வணக்கம் பணத்தைச் சேமிப்பதற்கு நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அவற்றில் அஞ்சல் அலுவலகம் பலவகையான சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது அவற்றில் சேமிப்பதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ஒன்று தான் மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் ஒரு மொத்தமான தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்து அதற்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் பெறலாம் அல்லது இந்த கால அளவு முடிந்தபிறகும் அந்த வட்டியை மொத்தமாக பெற்றுக்கொள்ள முடியும். சரி இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் மற்றும் SBI மாத வருமானம் திட்டம் இவற்றில் எது சிறந்தது? எந்த திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தகுதி:Post Office MIS vs SBI MIS

போஸ்ட் ஆபீஸ் மற்றும் SBI ஆகிய இரண்டு மாத வருமான திட்டத்திற்குமே 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேரலாம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டாக ஒரு கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கின் மூலம் பெறப்பட்ட வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 14 லட்சம் லாபம் தரும் சேமிப்பு திட்டம்..!

முதலீட்டு தொகை:

வகை போஸ்ட் ஆபீஸ் SBI
குறைந்தபட்சம் முதலீட்டு தொகை 1000 1000
அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இருப்பினும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்

முதிர்வு காலம்:

போஸ்ட் ஆபீஸ்  SBI
5 வருடம் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை மொத்தம் 8 விதமான கால அளவுகள் உள்ளது.

மற்ற வசதிகள்:

  • Nomination Facility: போஸ்ட் ஆபீஸ் மற்றும் SBI ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ளது.
  • Loan Facility: போஸ்ட் ஆபீஸ் மாத வருமானம் திட்டத்தில் இல்லை. ஆனால் SBI மாத வருமான திட்டத்தில் உள்ளது.
  • Premature Closure ஆப்சன் போஸ்ட் ஆபீஸ் மற்றும் SBI ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ளது. இருப்பினும் அதற்கான தொகையும்  வசூலிக்கப்படும்.

எதில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது:

  • போஸ்ட் ஆபிஸில் இந்த மாத வருமான திட்டத்திற்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது.
  • SBI-யில் 8 விதமான கால அளவில் இந்த மாத வருமான திட்டத்திற்கு வட்டி வழங்கப்படுகிறது. அதற்கான அட்டவணையை இப்பொழுது கீழ் பார்க்கலாம்.
8 விதமான கால அளவுகள் General Public  Senior Citizen
7-45 நாட்களுக்கு  2.9% 3.4%
46-179 நாட்களுக்கு  3.9% 4.4%
180-210 நாட்களுக்கு  4.4% 4.9%
211-1 வருடத்திற்கு  4.4% 4.9%
1-2 வருடத்திற்கு  5% 5.5%
2-3 வருடத்திற்கு  5.1% 5.6%
3-5 வருடத்திற்கு  5.3% 5.8%
5-10 வருடத்திற்கு  5.4% 6.2%

எதில் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

முதலீட்டு தொகை போஸ்ட் ஆபீசில் வழங்கப்படும் வட்டி தொகை SBI வழங்கப்படும் வட்டி தொகை
General Public  Senior Citizen
மாதம் மாதம் 5 வருடத்தில் மாதம் 5 வருடத்தில் மாதம் 5 வருடத்தில்
1 லட்சம் 550 33000 450 27000 517 31000
3 லட்சம் 1650 99000 1350 81000 1550 93000
4.5 லட்சம்  2475 148500 2025 121500 2325 139500
9 லட்சம் 4950 297000 4050 243000 4650 279000
11 லட்சம்  —- 4950 297000 5683 341000

 

இதுவரை பார்த்ததில் உங்களுக்கே தெரிந்திருக்கும் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் சிறந்ததா அல்லது SBI மாத வருமான திட்டம் சிறந்ததா என்று. SBI மாத வருமான திட்டத்தில் சில ஆப்ஷன்கள் இருந்தாலும். போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டத்தில் தான் அதிக வட்டி வழங்கப்படுகிறது. மற்றும் அதற்கான வருமானமும் வழங்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மலிவான விலையில் LED பல்புகளை வழங்கும் உஜாலா திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement