Women Entrepreneurs Scheme in India in Tamil
பெண் தொழில் முனைவோருக்கு அரசு உதவிடும் வகையில் நிறைய திட்டங்கள் அறிவித்துள்ளது. அந்த அருமையான திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அரசு விவசாயிகளுக்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மற்ற வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து பெண்களுக்கு உதவிடும் வகையில் பெண் தொழில் முனைவோருக்கு அருமையான திட்டங்களை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்..!
Annapurna Scheme in Tamil:
இது உணவு சார்ந்த தொழில்களுக்கு கடனை வழங்குகிறது. இதன் மூலம் தொழில்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மகளிர் கடன் திட்டத்தில் பெண்கள் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை விற்கலாம். இது பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிர்வகிக்கும் மற்றும் பழக்கமான ஒன்று. இந்த திட்டத்தில் கடன் வரம்பு ரூ.50,000 ஆகும்.
Bharatiya Mahila Bank Business Loan Scheme in Tamil:
பெண்களுக்கு இந்த திட்டம் ஆதரவாகவும் அவர்களின் தொழிலை முன்னேற்றவும் உதவி செய்கிறது. பெண்களுக்கு பொருளாதார வலுவூட்டும் நோக்கத்தை இந்த வங்கி கொண்டுள்ளது. இதன் மூலம் கடன் வரம்பு ரூ.20 கோடி வரை கடன் வழங்குகிறது.
Mudra Yojana Scheme in Tamil:
இது நாட்டில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் தொழில் முனைவோருக்கு 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதில் கிரெடிட் கார்டுகள் போல முத்ரா அட்டைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் Rs.1,51,450/- வட்டியாக பெறலாம் அருமையான முதலீட்டு திட்டம்..!
Orient Mahila Vikas Yojana Scheme in Tamil:
இந்த திட்டத்தில் பெண் தொழில் முனைவோருக்கு 25 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மேலும் அதனை திருப்பி செலுத்த 7 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குகிறது. அதே நேரத்தில் 2% வரை வட்டி விகிதத்தில் சலுகையும் அளிக்கப்படுகிறது.
Dena Shakti Scheme in Tamil:
பெண் தொழில் முனைவோருக்கு இந்த திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு தொழில், சில்லறை வணிகம், சிறுகடன் நிறுவனம் நடத்துபவருக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
Pradhan Mantri Rozgar Yojana Scheme in Tamil:
இந்த திட்டமும் முழுமையாக பெண் தொழில் முனைவோருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும்.
இதனுடைய கடன் தொகையின் மதிப்பு 15% சதவீதம், அதாவது ஒரு கடனாளிக்கு 12,500 வரை வழங்கப்படுகிறது. வயது தகுதி 35 வயதுக்குள் இருக்கவேண்டும். வணிகத்திற்காக 2 லட்சம் எனவும், சேவை மற்றும் தொழில்துறைக்கு 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
Udyogini Scheme in Tamil:
இந்த திட்டம் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க ஊக்கமளிக்கிறது. மேலும் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவி செய்கிறது. இந்த திட்டம் குடும்ப வருமானம் 1,000 கீழ் உள்ளவர்கள் மட்டுமே திட்டத்தில் சேர முடியும். ஆண்டுக்கு 40,000 அவர்களுக்கு குறிப்பாக வர்த்தகம் மற்றும் சேவை துறையில் கடன்களை அளிக்கிறார்கள். இதற்கு அதிகபட்சமாக 1 லட்சம் வரை பெற முடியும்.
Cent Kalyani Scheme in Tamil:
பெண்களுக்கான இந்த அரசாங்கத் திட்டம், புதிய தொழில்கள் மற்றும் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டது. இதில் குறிப்பிட்ட திட்டத்தில் கடன் கிடையாது. அதில் குறிப்பாக சில்லறை வணிகம், கல்வி மற்றும் பயிற்சி மற்றும் சுயஉதவி குழுக்கள் திட்டத்திற்கு தகுதியற்றவை.
மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள வணிகப் பெண்கள், பெண் தொழில் முனைவோருக்கான இந்த மகளிர் கடன் திட்டங்களின் மூலம் கடனைப் பெற்று தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தலாம். இந்த திட்டத்தில் 1 கோடி வரை கடன் வழங்குகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 1 லட்சம் முதலீட்டிற்கு 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |