இன்று வானில் நிலவும் ஆச்சிரியத்தை காண தவறாதீர்கள்..! நிலவுக்கு அருகில் இருந்த கோள்கள்..!

Closest to the Moon in the same straight line are Venus and Jupiter

Closest To The Moon in The Same Straight Line Are Venus and Jupiter in Tamil 

வானில் நாம் பார்ப்பது சூரியன், சந்திரன் மற்றும் மழைக்காலம் என்றால் மாலை நேரத்தில் வானவில் எப்போதாவது பார்க்க முடியும். கிரகணம் பார்க்கிறோம்  அவ்வளவு தான். ஆனால் சில நாட்களாக வானில் ஒரே நேர்கோட்டில் வெள்ளி, வியாழன், போன்ற கோள்களை ஒரே நேர்கோட்டில் பார்த்து வருகிறோம்..! இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அருகில் தெரிவது நிகழ்ந்து வருகிறது. சரி இன்று அதாவது 02.03.2023  தேதி ஒரே நேர்கோட்டில் இந்த மூன்று கோள்களும் நிகழவுள்ளது. அதனை பற்றி முக்கிய தகவலை தெரிந்துகொள்வோம் வாங்க..!

வெள்ளி, வியாழன், நிலா மூன்றும் ஒரே நேர்கோட்டில்:

Closest to the Moon in the same straight line are Venus and Jupiter

இன்று வானில் வெள்ளி, வியாழன் மற்றும் துணை கோளான நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் தெரியும் அறிய நிகழ்வு கடந்த 10 நாட்களாக நிகழ்ந்து வருகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் அதற்கு உரித்தான கோணங்களில் சாய்ந்து நீள் வட்ட பாதைகளில் சுற்றி வருகின்றன. இதற்கு இடையில் ஒரே நேர்கோட்டில் சில கோள்கள் வரும் தருணம் நிலவுகிறது.

நாசா அறிவித்த தகவல்: நாளுக்கு நாள் பூமியை விட்டு விலகி செல்லும் சந்திரன்..!

அந்த வகைகளில் சூரியனை சுற்றி வரும் வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கோள்களும், பூமியை சுற்றி வரும் துணைக்கோளான நிலவும் ஒன்றுக்கொன்று ஒரே நேர்கோட்டில் மிக மிக அருகில் மார்ச் 1 தேதி நிகழ்ந்தது.

 இதனை தொடர்ந்து நிலவு , வியாழன், வெள்ளி என மூன்று கோள்களும் இன்று ஒரே நேர்கோட்டில் சந்திக்க போகிறது என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் இந்த அற்புத நிகழ்வை பார்த்து ரசியுங்கள்.  
தொடர்புடைய தகவல் 👇👇👇
சனி கிரகம் பற்றிய பல வியக்க வைக்கும் தகவல்கள்..!
புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்..!
கோள்கள் பற்றிய தகவல்கள் 

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science