சூரியனின் வெப்ப அளவு | Heat Level of Sun in Tamil
ஒரு நாள் மழையை பார்த்து விட்டோம் என்றால் உடனே சூரியன் எப்போது வரும் என்று சொல்வார்கள். ஒரு நாளுக்கு எப்படி என்றால் ஒரு சில நாட்களில் மழை பெய்ந்துகொண்டே இருந்தால், உடனே செய்திகளை வைத்து எப்போது மழை நிற்கும் என்று ஒரே பேச்சாக இருக்கும். அதேபோல் தான் வெயில் காலமும். என்ன இவ்வளவு வெயில் அடிக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சூரியனில் எவ்வளவு தான் வெப்பம் இருக்கும்..? அது எவ்வளவு தூரத்தில் இருந்து நமக்கு அதிக வெப்பத்தை அளிக்கிறது..? அப்படி எவ்வளவு தான் சூரியனில் வெப்பம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சூரியன் பற்றிய முக்கிய தகவல்கள்:
சூரியன் சோலார் சிஸ்டத்தின் இதயம் என்று கூட சொல்லலாம். அதனுடைய மிக பெரிய பொருளும் இது தான். சூரியன் Yellow Dwarf வகையை சார்ந்தது.
சூரியன் போல Milky Way Galaxy Planets நட்சத்திரங்கள் 100 கோடிக்கு மேல் உள்ளது என்று சொல்லபடுகிறது.
சூரியன் கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகி உள்ளது என்று விஞ்ஞானிகளின் கருத்துக்கள் சொல்கிறது.
இந்த சூரியன் இளமையான நட்சத்திரங்கள் போல் தான் பார்க்கபடுகிறது. சூரியன் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு ஒளிரும் என்றும் இதற்கு தேவையான எரிபொருள் சூரியனில் உள்ளது என்றும் சொல்லபடுகிறது.
சூரியனில் உள்ள எரிபொருள் குறைய குறைய சூரியன் ஒரு ரெட் ஜெயன்ட் போல கொஞ்சம் கொஞ்சமாக பெருசாக மாறும். இதுபோல் ஏற்பட்டால் பூமி கண்டிப்பாக அழிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 சனி கிரகம் சூரியனை சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா..?
சூரியனின் விட்டம் எவ்வளவு தெரியுமா..?
சூரியனின் விட்டமானது 1.3927 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். இது பூமியை விட கிட்டத்தட்ட 109 மடங்கு பெரிதாக உள்ளது.
சூரியனின் வெப்ப நிலை:
நமக்குத் தெரியும் சூரியனின் மேற்பரப்பு ஃபோட்டோஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் வெப்பம் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. சூரியனின் வெளியே தெரியும் மேற்பரப்புக்கு கீழேயிருக்கும் பரப்பான க்ரோமோஸ்பியரில் வெப்ப அளவு 6000 முதல் 20,000 செல்சியஸ் வரை இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். உள் சூரிய வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும். வெளிப்புறம் 5.500 டிகிரி செல்சியஸ் ஆகும் . சூரியனுக்கும் பல்வேறு அடுக்குகள் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 பூமியை நிலவு ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா..!
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |