How Long Is 1 Day In Space On Earth
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே சில ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் இதுவும் ஓன்று. அது என்ன என்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை விண்வெளி பயணத்தை பற்றி தான் சொல்கிறேன். நம் அனைவருக்குமே விண்வெளியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கும். ஆனால் நம் அனைவராலும் விண்வெளிக்கு செல்ல முடியுமா என்றால் அது கேள்விக்குறி தான்.
அப்புறம் எப்படி விண்வெளியில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வது என்று நினைப்பீர்கள். அதற்கு தான் எங்கள் பொதுநலம்.காம் பதிவு உள்ளதே. எங்கள் பதிவில் தினமும் ஒரு விண்வெளி தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பூமியில் 1 நாள் என்பது விண்வெளியில் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஒரு மனிதன் விண்வெளியில் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும்..? |
பூமியில் ஒரு நாள் என்பது விண்வெளியில் எத்தனை நிமிடம்:
பொதுவாக நாம் அனைவருமே பூமியிலும் விண்வெளியில் ஒரே நேரம் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மை கிடையாது. நாம் வாழும் பூமியில் இருக்கும் நேரத்துடன் விண்வெளி நேரத்தை ஒப்பிடும் போது பூமியின் நேரத்தை விட விண்வெளியின் நேரம் குறைவாக இருக்கிறது. அது எவ்வளவு குறைவாக இருக்கிறது என்று இங்கு பார்ப்போம்.
பொதுவாக பகல் முதல் இரவு வரை ஒரு சுழற்சியை தான் ஒரு நாள் என்று சொல்கின்றோம். இது சூரிய நாள் என்று அழைக்கப்படுகிறது. பூமியில், ஒரு சூரிய நாள் சுமார் 24 மணி நேரம் ஆகும்.
பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் |
பூமியின் சுற்றுப்பாதை நீள்வட்டமானது. அதாவது, அது ஒரு சரியான வட்டம் அல்ல. பூமியில் உள்ள சில சூரிய நாட்கள் 24 மணி நேரத்தை விட சில நிமிடங்கள் அதிகமாகவும் சில நிமிடங்கள் குறைவாகவும் இருக்கும்.
அதுபோல ஒரு கிரகம் முழுவதுமாக சுழன்று ஒரு முழு சுழற்சியை உருவாக்க எடுக்கும் நேரத்தை ஒரு பக்கவாட்டு நாள் என்று சொல்லப்படுகிறது.
அதாவது பூமியில் 1 நாள் என்பது விண்வெளியில் கிட்டத்தட்ட சரியாக 23 மணி 56 நிமிடங்கள் ஆகும். அதுபோல தோராயமாக 24 மணி நேர நாள் கொண்ட ஒரே கிரகம் பூமி மட்டும் தான்.ஆனால், மற்ற கிரகங்கள் வெவ்வேறு விகிதங்களில் சுழல்கின்றன. அதனால் அவற்றின் நாள் விகிதம் பூமியின் நேரத்தை விட வேறுபடுகிறது.
விண்வெளி பற்றிய செய்திகள் தெரிந்துகொள்ள 👇
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பதால் கண்ணீர் விட்டு கூட அழ முடியாதா என்ன சொல்றீங்க
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |