முழு பிரபஞ்சத்திலும் மொத்தம் எத்தனை கிரகங்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..?

How many Planets are there in the Whole Universe in Tamil

How many Planets are there in the Whole Universe in Tamil

நாம் வாழும் பூமியிலேயே நம்மை சிந்தனை செய்ய வைக்க கூடிய பல வகையான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்துள்ளது. அதே போல் நமது பூமி இடப்பெற்றுள்ள சூரிய குடும்பம் மற்றும் விண்வெளியிலும் நம்மை சிந்தனை செய்ய வைக்க கூடிய பல ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்துள்ளது. அதனால் தான் நம்மை நாளுக்கு நாள் ஆச்சிரியப்படுத்தக்கூடிய சூரிய குடும்பம் பற்றியும் அது இருக்கின்ற விண்வெளி பற்றியும் தகவல்களை அறிந்து கொள்வது என்பது நம்மில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். எனவே தான் விண்வெளி பற்றியும் சூரிய குடும்பம் பற்றிய பல தகவல்களை நாம் நமது அறிவியல் பதிவின் மூலம் அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவிலும் விண்வெளி பற்றிய ஓரு தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் முழு பிரபஞ்சத்திலும் மொத்தம் எத்தனை கிரகங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..!

பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகச் சிறிய நட்சத்திரம் எது தெரியுமா

How many Planets are there in the Entire Universe in Tamil:

How many Planets are there in the Entire Universe in Tamil

நமது வாழும் சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தில் பல கோள்கள், விண்கற்கள் மற்றும் நட்சத்திரம் ஆகியவை உள்ளது என்பது நாம் அனைவருமே அறிந்த ஒரு விஷயம் தான்.

ஆனால் நாம் அனைவருக்குமே நமது மனதில் விண்வெளி பற்றிய பல கேள்விகள் இருக்கும். அவை அனைத்திற்கும் நமக்கு பதில் கிடைத்ததா என்றால் ஒரு சில கேள்விகளுக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் ஒரு சில கேள்விகளுக்கு சரியான பதில் இது தான் என்று குறிப்பிட முடியாது. அப்படி சரியான பதில் கூறமுடியாத ஒரு கேள்வி தான் இந்த முழு பிரபஞ்சத்திலும் மொத்தம் எத்தனை கிரகங்கள் உள்ளது.

இந்த கேள்விக்கான சரியான பதிலை இன்று வரை யாராலையும் கூற முடியவில்லை. ஆனால் சில அனுமானங்கள் மற்றும் யூகங்கள் உள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம், அதாவது நாம் வாழும் நமது பால் வீதியில் மட்டும் குறைந்தது 100 பில்லியன் கிரகங்கள் இருப்பதாக நாசா கணித்துள்ளது.

நட்சத்திரங்கள் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்

ஆனால் தற்போது 4,000 க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று நாசா கூறியுள்ளது. ஆனால் ஒரு சிலர் 5,000 க்கும் மேற்பட்ட கிரகங்களில் பூமி போன்ற சிறிய கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் ஒரு சிலர் 400 பில்லியன் பால் வீதி நட்சத்திரங்களுடன், மொத்தம் 1 முதல் 10 டிரில்லியன் சுற்றுவட்டார கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றன.

எது எப்படியோ முழு பிரபஞ்சத்திலும் மொத்தம் எத்தனை கிரகங்கள் உள்ளது என்ற நமது கேள்விக்கான சரியான பதில் கிடைக்கவில்லை என்பதில் ஒரு சிறிய வருத்தம். ஆனால் யாராலையும் அளவிட முடியாதா அளவிற்கு தனக்குள் பல ஆச்சரியங்களையும் கேள்விகளையும் கொண்டுள்ள பிராபஞ்சத்தில் நாம் வாழுகின்றோம் என்பதில் ஒரு மனமகிழ்ச்சி.

பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் எது தெரியுமா

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science