How Much Does Earth Weight in Tamil
வணக்கம் நண்பர்களே. பூமியில் மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அப்படி நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான இந்த பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளது. பூமி தோன்றி ஒரு பில்லியன் ஆண்டுக்குள் உரினங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பல வியக்கத்தக்க மாற்றங்கள் உருவாகியுள்ளன. இப்படி பல அம்சங்கள் நிறைந்த நாம் வாழும் பூமி எவ்வளவு எடை உடையது என்று தெரியுமா.? பூமியை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களில் பூமியின் எடையும் ஒன்று. ஓகே வாருங்கள் பூமியின் எடை எவ்வளவு என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Weight of Earth in Kg in Tamil:
பூமியின் எடை எவ்வளவு.?
பூமியின் எடை 6 × 10^24 கிலோ கிராம் என கணக்கிடப்படுகிறது. அதாவது 6 000 000 000 000 000 000 000 000 கிலோ கிராம் ஆகும்.பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா..! |
What is The Surface Area of The Earth in Tamil:
பூமியின் பரப்பளவு எவ்வளவு.?
பூமியின் மொத்த மேற்பரப்பு பகுதி சுமார் 509 600 000 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது 197 000 000 சதுர மைல்கள் ஆகும்.
நிலத்தின் பரப்பளவு:
பூமியில் உள்ள நிலத்தின் பரப்பளவு 361 740 000 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது 139 668 500 சதுர மைல்கள். இது பூமியின் மொத்த மேற்பரப்பில் 29% ஆகும்.
நீரின் பரப்பளவு:
பூமியில் உள்ள நீரின் பரப்பளவு 361 740 000 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது 139 668 500 மைல்கல். இது பூமியின் மொத்த மேற்பரப்பில் 71% ஆகும்.
மனித இதயத்தின் எடை எவ்வளவு தெரியுமா..? |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |