How Water Came On Earth
இன்றைய பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவலை தெரிந்து கொள்ள போகிறோம் என்று நினைப்பீர்கள். அது என்னவென்றால் நாம் வாழும் பூமிக்கு நீர் எப்படி வந்தது என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
| சூரியனிடம் இருந்து தொலைந்து போன கிரகம் எது தெரியுமா..? |
How Water Came On Earth in Tamil:

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியம். மனிதன் மட்டும் இல்லை இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியம்.
நாம் வாழும் பூமி 71% நீரால் உருவான ஒரு கிரகம் ஆகும். ஆனால் விண்வெளியில் சூரியனின் வெப்பத்தின் காரணமாக தண்ணீரால் திரவ நிலையிலோ அல்லது உறை நிலையிலோ இருக்க முடியாது. அப்புறம் எப்படி தண்ணீர் பூமிக்கு வந்தது என்று யோசிப்பீர்கள்.
சூரிய குடும்பத்தை விட்டு வெளியே இருக்கும் கற்கள் அதாவது விண்வெளி கற்களில் உறை நிலையில் தண்ணீர் இருக்கிறது. அந்த விண்வெளி கற்கள் பூமியில் மோதியதால் தான் பூமிக்கு நீர் வந்தது என்று நம்பப்படுகிறது.
| சூரியனுக்கு அடுத்து வெப்பமாக இருக்கும் கிரகம் எது தெரியுமா..? |
ஆனால் இந்த விண்வெளி கற்களில் இருக்கும் தண்ணீரையும் பூமியில் இருக்கும் தண்ணீரையும் எடுத்து டெஸ்ட் செய்த போது இது இரண்டிற்கும் வேறுபாடு அதிகமாகவே இருந்தது. அதனால் பூமிக்கு விண்வெளி கற்களில் இருந்து நீர் வந்ததற்கான வாய்ப்புகளே கிடையாது என்று தெரியவந்தது. அப்புறம் எங்கிருந்து தான் பூமிக்கு தண்ணீர் வந்தது என்று கேட்பீர்கள்.
அதன் பின் விண்வெளியில் Carbonaceous Chondrite என்ற ஒரு வகையான விண்கற்களை கண்டுபிடித்தார்கள். இந்த விண்கற்களில் இருக்கும் தண்ணீரும் பூமியில் இருக்கும் தண்ணீரையும் எடுத்து டெஸ்ட் செய்ததில் அது இரண்டிற்கும் வேறுபாடுகளே இல்லை. இரண்டும் 99% ஒத்துப்போனது. அப்போது தான் கண்டறிந்தனர். இந்த Carbonaceous Chondrite என்ற விண்கற்கள் பூமியில் மோதியதால் தான் பூமிக்கு நீர் வந்தது. இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் பூமிக்கு எப்படி தண்ணீர் வந்தது என்று..!இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..! பூமிக்கு நீர் எப்படி வந்தது என்று அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்..!
| சூரியனில் இருந்து நிலவு எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா..? |
| இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |














