சனி கிரகம் பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே..!

Information About Saturn Planet in Tamil

Information About Saturn Planet in Tamil

பொதுவாக விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயமாகும். அப்படி உங்களுக்கும் விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்தில் உள்ள சனி கிரகம் பற்றிய சில சுவாரசியமான மற்றும் வியக்க வைக்கும் சில தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து சனி கிரகம் பற்றி தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்..!

Facts About Saturn Planet in Tamil:

Facts About Saturn Planet in Tamil

சனி கோள் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள் ஆகும். இது 36,183.7 மைல்கள் (58,232 கிலோமீட்டர்) ஆரம் கொண்ட சனி கிரகம் பூமியை விட 9 மடங்கு அகலமானது.

 சனி கோள் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் தன்னைத்தானே சுற்றி கொள்வதற்கு 10 மணி நேரம் தான் எடுத்து கொள்கின்றது. இது சூரியக் குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். 

சூரியக் குடும்பத்தில் உள்ள நான்கு வளி அரைக்கோளங்களில் சனியும் ஒன்றாகும்.

இது புவியின் அடர்த்தியில் எட்டில் ஒரு பங்கே இருந்த போதும் தனது பெரிய அளவினால் புவியை விட 95 மடங்கு நிறையுடையதாக உள்ளது.

 நமது சூரிய குடும்பத்திலேயே அதிக நிலவுகளை கொண்டுள்ள ஒரே கிரகம் இது தான். இதற்கு மொத்தம் 82 நிலவுகள் உள்ளன. இந்த நிலவுகளில் சிலவற்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சில அம்சங்கள் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த சனி கோள் முற்றிலும் ஒரு வாயு கோள் ஆகும். அதாவது இந்த கோளில் முற்றிலும் வாயுக்களே நிரம்பி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த சனி கோளில் 96% ஹைட்ரஜனும் 4% ஹீலியமும் தான் நிரம்பி உள்ளது.

இது ஒரு வாயு கோள் என்பதால் இங்கு சாதாரணமாக அடிக்கின்ற காற்று கூட 1000 கிலோ மீட்டர்/மணி வேகத்தில் வீசுகின்றது என்று அறியப்பட்டுள்ளது.

இதன் பெயர் ரோமன் மொழியில் இருந்து பெறப்பட்டுள்ளது. இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் இந்த கோள் வெளிர் மஞ்சள் நிறத்தை கொண்டுள்ளது.

மேலும் இது 62% சூரிய ஒளியை எதிரொளித்துவிடும். எனவே இதனை சூரிய குடும்பத்தின் வைரக்கல் என்று அழைப்பார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 கோள்கள் பற்றிய தகவல்கள் 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science