யுரேனஸ் கோள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..!

Information About the Planet Uranus in Tamil

பொதுவாக விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயமாகும். அப்படி உங்களுக்கும் விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோளான யுரேனஸ் கோள் பற்றிய சில சுவாரசியமான மற்றும் வியக்க வைக்கும் சில தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து யுரேனஸ் கிரகம் பற்றி தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> சனி கிரகம் பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

Facts About the Uranus Planet in Tamil:

Facts About the Uranus Planet in Tamil

இராகு (Uranus) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாவது பெரிய கோளாகும்.

மேலும் நிறை அடிப்படையில் இது சூரிய குடும்பத்தில் உள்ள நான்காவது பெரிய கோளாகும். யுரேனஸ் நமது சூரிய குடும்பத்தில் உள்ள குறைந்த அடர்த்தியான பொருட்களில் ஒன்றாகும்.

இக்கோள் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செர்சல்  என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர்.

யுரேனஸ் கோள் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரியதாக்கியது. இதன் காரணமாக சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமும், சனிக் கோளுக்கும் யுரேனஸ் கோளுக்கும் இடைப்பட்ட தூரமும் ஒன்றாகவே இருந்தது.

இக்கோளுக்கு கிரேக்க கடவுள் யுரேனஸின் நினைவாகப் பெயரிடப்பட்டது. யுரேனஸ் கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் இதனை ஒரு கோளாகவே கருதவில்லை.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்

 இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும்.  அப்படியென்றால் யுரேனஸில் ஓர் ஆண்டு என்பது 43,000 நாட்கள் ஆகும். 

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்கள் அனைத்தும் குறைவான சுழற்கோணத்தை கொண்டிருந்தாலும் இக்கோள் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சூரியனை சுற்றி சுழற்கிறது.

அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது.

இது ஒரு பெரிய வாயு கோள் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. மேலும் இது சூரிய குடும்பத்தில் உள்ள மிகவும் குளிர்ச்சியான கிரகம் ஆகும்.

இந்த கிரகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 72 K (-201 °C/-330 °F)-யாகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 55 K (-218 °C/-360 °F)-யாகவும் உள்ளது. இக்கோளுக்கு 27 நிலவுகள் கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science