Smallest Star in the Universe in Tamil
பொதுவாக நாம் வாழும் சூரிய குடும்பத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு பல வகையான சுவாரசியமான மற்றும் பயனுள்ள தகவல்கள் உள்ளது. அதனால் தான் சூரிய குடும்பம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பது நம்மில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படி விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஆம் நண்பர்கள் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அறிவியல் மற்றும் விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகச் சிறிய நட்சத்திரம் எது என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். உங்களுக்கும் அது எந்த நட்சத்திரம் என்பதை அறிந்து வேண்டுமா.? அப்போ இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நட்சத்திரங்கள் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்
பிரபஞ்சத்தின் மிகச்சிறிய நட்சத்திரம் எது..?
நமது சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தில் பல கோள்கள், விண்கற்கள் மற்றும் நட்சத்திரம் ஆகியவை உள்ளது என்பது நாம் அனைவருமே அறிந்த ஒரு விஷயம் தான்.
அதிலும் குறிப்பாக நாம் அனைவருக்குமே நட்சத்திரம் என்றாலே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இரவில் வானில் நிலவுடன் இந்த நட்சத்திரங்களும் மிகவும் அழகாக காட்சி அளிக்கும். அதனை நம்மில் பலரும் எண்ணுவதற்கு முயற்சி செய்து தோல்வியை அடைந்திருப்போம்.
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் எது தெரியுமா
அப்படி நாம் நட்சத்திரத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இவையெல்லாம் அளவில் சிறியதாக இருக்கின்றது. ஆனால் இவை அனைத்தையும் விட அளவில் மிக சிறிய நட்சத்திரம் இருக்குமா..? என்ற கேள்வி தோன்றியிருக்கும்.
அந்த கேள்விக்கான சரியான பதிலை இங்கு காணலாம். அதாவது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு பிரபஞ்சத்தின் மிகச்சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு EBLM J0555-57Ab என பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது இங்கிலாந்து நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் கிரக கண்டுபிடிப்பு பரிசோதனையான Super WASP மூலம் தான் இந்த நட்சத்திரம் அடையாளம் காணப்பட்டது.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |