What Is The Circumference of The Moon in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் விண்வெளி பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நிலவின் சுற்றளவு எவ்வளவு என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அனைவருக்கும் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். விண்வெளி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஆசையாக இருக்கும். ஏனென்றால் விண்வெளியில் பல அதிசயங்கள் நிகழ்கின்றன. அதிலும் நிலா என்பது அனைவருக்கு பிடித்த ஒன்று. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிலாவை பார்த்து ரசிப்பார்கள். பூமியில் இருந்து பார்ப்பதற்கு சிறிய உருவத்தில் பளிச்சென்று தெரியும். ஆனால் நிலா உண்மையாக எவ்வளவு சுற்றளவு உடையது என்று யாருக்காவது தெரியுமா.? சரி வாருங்கள் பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா எவ்வளவு பெரியது என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா..! |
What Is The Circumference of The Moon in Miles in Tamil:
நிலவின் அளவானது பூமியின் கால் பகுதி அளவிற்கு சற்று அதிகமாக இருக்கும். பூமத்திய ரேகையில் இருந்து 10.917 கிலோ மீட்டர் அளவு சுற்றளவும் மற்றும் ஆரம் 1,737 கிலோமீட்டர் கொண்டதாகும். அதாவது நிலவின் மையத்திலிருந்து அதன் மேற்பரப்பு வரையிலான தூரம் ஆகும். எனவே சந்திரன் எதிர்பார்த்ததை விட சற்று பெரியதாக தான் இருக்கிறது. மைல்களில் சந்திரனின் சுற்றளவு 6,783 மைல்கள் ஆகும்.நிலவில் தண்ணீர் உள்ளதா..?
நிலவின் சாய்வின் காரணமாக அதனின் சில பகுதிகள் சூரிய ஒளியை பார்க்காது. அந்த பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் 2009 ஆம் ஆண்டில் சந்திராயன்-1 நிலவின் சுற்றுவட்ட பாதையை கடந்த போது 40-ற்கும் மேற்பட்ட பள்ளங்கள் நீர் பனியை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டது.
சந்திரன் பூமியிலிருந்து விலகி செல்கிறதா..? நெருங்கி வருகிறதா..?
சந்திரன் பூமியிலிருந்து விலகித்தான் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் 4 செ.மீ வெளியில் நகர்கிறது. ஏனென்றால் பூமிக்கும் அலைகளுக்கும் இடையே உராய்வு ஏற்படுகிறது. அப்போது கிரகத்தின் சுழற்சி குறைகிறது. எனவே பூமியின் சுழல் வேகம் குறைவதால் சந்திரன் ஊர்ந்து செல்கிறது.
சூரியனில் இருந்து நிலவு எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா..? |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |