விண்வெளியில் அடிபட்டால் இரத்தம் என்ன நிறத்தில் வரும் என்று தெரியுமா..?

What Is The Color Of Blood in Space in Tamil

What Is The Color Of Blood in Space 

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமான பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நம் அனைவருக்குமே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்னும் சொல்லப்போனால் விமானத்தில் செல்வதே பலருக்கும் கனவாக இருக்கிறது.

அப்புறம் எப்படி தான் விண்வெளியில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். அதற்கு தான் எங்கள் பொதுநலம்.காம் பதிவு உள்ளதே..! இந்த பதிவில் தினமும் விண்வெளி தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் விண்வெளியில் அடிபட்டால் நம் இரத்தம் என்ன நிறத்தில் வரும் என்பதை பற்றி தான் காணப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

வானத்தின் உண்மையான நிறம் என்ன தெரியுமா

விண்வெளியில் இரத்தத்தின் நிறம் என்ன..? 

விண்வெளியில் இரத்தத்தின் நிறம் என்ன

பொதுவாக நம் மனதில் விண்வெளி பற்றி பல கேள்விகள் இருக்கிறது. அதில் இந்த கேள்வியும் ஓன்று. பொதுவாக விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் அங்கு மனிதர்கள் கூட மிதக்க தான் செய்கிறார்கள். அப்படி விண்வெளியில் அடிபட்டு இரத்தம் வந்தால் அதுவும் மிதக்க தானே செய்யும். ஆனால் நாம் பார்க்கப்போகும் கேள்வி அது இல்லை.

ஒரு வேலை விண்வெளியில் ஒரு மனிதருக்கு அடிபட்டால் அவருக்கும் வரும் இரத்தத்தின் நிறம் என்ன என்பதை பற்றி தான் காணப்போகிறோம். சரி இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..?

விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது தெரியுமா
 விண்வெளியில் திரவங்களின் இயற்பியல் எதிர்வினை எதிர்-உள்ளுணர்வுடன் இருக்கிறது. அதனால் விண்வெளியில் நமக்கு அடிபட்டால் இரத்தம் அடர் சிவப்பு நிறத்தில் அல்லது மெரூன் நிறத்தில் வரும் என்று சொல்லப்படுகிறது. 

அதாவது விண்வெளியில் போதுமான ஆக்சிஜன் கிடைக்கும் போது நமக்கு பிரகாசமான சிவப்பு நிறத்தில் இரத்தம் வரும். அதுவே ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால் அப்போது இரத்தம் மெரூன் நிறத்தில் வரும்.

ஏனென்றால் நமது தோல் மற்றும் கொழுப்பு செல்கள் சூரியனில் இருந்து குறைந்த ஆற்றல் கொண்ட சிவப்பு ஒளியை உறிஞ்சிவிடும். அதனால் போதுமான ஆக்சிஜன் இல்லாத போது இரத்தம் மெரூன் நிறத்தில் வரும். எனவே, விண்வெளியில் உங்களுக்கு அடிபட்டால், உங்கள் இரத்தம் அடர் சிவப்பு அல்லது மெரூன் நிறமாக இருக்கும்.

விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science