வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பூமி சூரியனை சுற்றி வரும் நாட்கள் எவ்வளவு தெரியுமா..?

Updated On: March 31, 2023 4:14 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

What is The Period of The Earth Around the Sun 

நாம் அனைவரும் பள்ளி பருவத்தில் அறிவியலை பற்றி படித்து இருப்போம். அப்போது நாம் அதனை படிக்கும் போதும் அத்தகைய அறிவியல் படங்கள் அனைத்தும் சுவாரசியம் மிக்கதாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் நாம் அனைவரும் அதனை பற்றிய அடிப்படை தகவலை கூட தெரிந்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் அனைவரும் படிப்பு, வேலை வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிலைக்கு என்று விட்டோம். அதனால் அறிவியலில் உள்ள சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் போகிவிட்டது. ஆனால் இப்போது நாம் அந்த அறிவியலை பற்றி படித்தாலும் கூட சுவாரஸ்யம் அதிகமாக தான் இருக்கிறது . ஆகவே இன்றைய அறிவியல் பதிவில் பூமி சூரியனை சுற்றி வரும் காலம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து பார்த்து தெரிந்துக்கொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ சூரிய குடும்பத்தில் நிலவு இல்லாத கோள் எது தெரியுமா

பூமி சூரியனை சுற்றும் காலம் எவ்வளவு.?

பூமி சூரியனை சுற்றும் காலம்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது நிறைய அம்சங்களை உள்ளடக்கியது என்று தான்  கூற வேண்டும். ஏனென்றால் அத்தகைய பூமியை பற்றி நாம் நிறைய தெரிந்துக்கொள்ளதா விஷயங்களும் உள்ளது.

அதில் ஒன்று தான் பூமி சூரியனை சுற்றி வரும் காலமும் ஆகும். பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர ஆகும் காலமானது 365 1/4 நாட்கள் ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 1 வருடம் முழுவதும் சுற்றி வருகிறது.

இப்படி பூமியானது சூரியனை சுற்றி வரும் போதும் சேமிக்கும் 6 மணி நேரமானது நான்கு ஆண்டுகளில் 1 நாளாக வருகிறது.

இவ்வாறு 6 மணி நேரமாக சேர்க்கப்படும் நாளானது பிப்ரவரி மாதத்தில் வருகிறது. அதுவும் பிப்ரவரி மாதத்தின் போது 29-வதாக நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. இதனை நாம் அனைவரும் லீப் ஆண்டு என்று கூறுவோம். 

அதுமட்டும் இல்லாமல் பூமி சூரியனை சுற்றி வரும் அதனுடைய நிலையானது மாறுபடுகிறது. அதனால் தான் ஒரு வருடத்தில் வெயில் காலம், மழைக்காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் என பிரிக்கப்பட்டு அதனுடைய காலநிலையானது மாறுபடுகிறது.

மேலும் சூரியனை பூமி ஒரே ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றிவருவதால் அது ஒரே மாதிரியாக சாய்ந்த நிலையினை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ பூமி சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றி வருகின்றது என்று உங்களுக்கு தெரியுமா.. 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now