Which is the Coldest Planet in the Solar System in Tamil
பொதுவாக அனைவருக்குமே விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது என்பதில் மிகவும் ஆர்வம் இருக்கும். ஏனென்றால் விண்வெளி பற்றி அறிந்து கொள்வது என்பது மிகவும் சுவாரசியமான விஷயம் ஆகும். அப்படி உங்களுக்கும் விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்த கிரகம் என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> சூரியனுக்கு அடுத்து வெப்பமாக இருக்கும் கிரகம் எது தெரியுமா
Coldest Planet in the Solar System in Tamil:
விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
சூரிய குடும்பத்தில் உள்ள மிகவும் குளிர்ச்சியான கோள் எது என்ற கேள்விக்கான பதில் என்னவென்றால் பூமியை விட சூரியனில் இருந்து 20 மடங்கு தொலைவில் உள்ள கோளான யுரேனஸ் கோள் தான் சூரிய குடும்பத்திலேயே மிகவும் குளிர்ச்சியான கோள் ஆகும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> யுரேனஸ் கோள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்
இந்த கோளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 72 K (-201 °C/-330 °F)-யாகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 55 K (-218 °C/-360 °F)-யாகவும் உள்ளது.
மேலும் இது ஒரு பெரிய வாயு கோள் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இந்த யுரேனஸ் கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு.
இக்கோள் ஒரு முறை சூரியனை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனஸில் ஓர் ஆண்டு என்பது 43,000 நாட்கள் ஆகும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> பூமியை நிலவு ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |