சூரியனுக்கு அடுத்து வெப்பமாக இருக்கும் கிரகம் எது தெரியுமா..?

Advertisement

Which Planet Is Hotter in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. சூரியனுக்கு அடுத்து வெப்பமாக இருக்கும் கிரகம் எது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சரி இதற்கான பதில் உங்களுக்கு தெறியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா..?

சூரியனுக்கு அடுத்து வெப்பமாக இருக்கும் கோள் எது..? 

சூரியனுக்கு அடுத்து வெப்பமாக இருக்கும் கோள் எது

பொதுவாக சூரியன் தான் வெப்பமான கோள் என்று நாம் அனைவருமே நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் சூரியனுக்கு அடுத்து வெப்பமாக ஒரு கோள் இருக்கின்றது. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

இது உண்மை தான். சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்து அதிக வெப்பத்தை கொண்ட கிரகம் இருக்கிறது. அது வேற எதுவும் இல்லை வீனஸ் தான். ஆம் வீனஸ் தான் சூரியனுக்கு அடுத்ததாக அதிக வெப்பத்தை கொண்ட கிரகம் ஆகும்.

நாம் வாழும் பூமியும் வீனஸும் பெரும்பாலும் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகின்றன. காரணம் அவை இரண்டின் அளவு, நிறை, அடர்த்தி, கலவை மற்றும் புவியீர்ப்பு ஆகியவற்றில் ஒரே மாதிரியாக இருக்கின்றது. வீனஸ் ஒரு வாயு கிரகம் அல்ல, ஆனால் அது ஒரு பாறை கிரகம் என்று சொல்லப்படுகிறது.

நாம் வாழும் பூமியின் நீளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா..?

 

அதுபோல சூரிய மண்டலத்தில் வீனஸ் வெப்பமான கிரகம் என்று சொல்லப்படுகிறது.  வீனஸ் சூரியனுக்கு மிக நெருக்கமான கிரகம் கிடையாது. அப்புறம் எப்படி அது வெப்பமான கிரகம் என்று நினைப்பீர்கள்.

அதற்கு காரணம்  வீனஸ் அடர்த்தியான வளிமண்டலம் புவி வெப்பமடைதலுடன் பூமியில் நேரடியாகக் காணும் கிரீன்ஹவுஸ் விளைவின் ரன்வே பதிப்பில் வெப்பத்தை சிக்க வைக்கிறது. இதன் விளைவாக வீனஸின் வெப்பநிலை 880 டிகிரி ஃபாரன்ஹீட்டை (471 டிகிரி செல்சியஸ்) அடைகிறது. இது ஈயத்தை உருக்கும் அளவுக்கு வெப்பமாக இருக்கும்.  

சுட்டெரிக்கும் வெப்பநிலையுடன், வீனஸ் ஒரு நரக வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது. அதில் முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு மற்றும் கந்தக அமில மேகங்கள் மற்றும் சுவடு அளவு நீர் மட்டுமே உள்ளது. வீனஸின் வளிமண்டலம் வேறு எந்த கிரகத்தையும் விட கனமானது என்றும் சொல்லப்படுகிறது.

சூரியனில் இருந்து நிலவு எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா..?

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science 
Advertisement