Why Astronauts Forget Walking After Landing On Earth
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் விண்வெளி பயணமும் ஓன்று. நம் அனைவருக்குமே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி விண்வெளியில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வமாக இருக்கும். சரி உங்களுக்கு விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..?
இந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறுமா என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால் அங்கு நடக்கும் விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு தான் எங்கள் பொதுநலம் பதிவு உள்ளதே. சரி வாங்க நண்பர்களே விண்வெளிக்கு சென்று வந்த பிறகு விண்வெளி வீரர்களால் ஏன் நடக்க முடியவில்லை என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
விண்வெளிக்கு சென்று வந்த பிறகு விண்வெளி வீரர்களால் ஏன் நடக்க முடியவில்லை..?
பொதுவாக விண்வெளிக்கு சில விண்வெளி வீரர்கள் சுற்றுப்பயணம் செய்வார்கள். அப்படி அவர்கள் விண்வெளிக்கு சென்று அங்கிருந்து பூமிக்கு வந்த பிறகு அவர்களால் நடக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று இங்கு காணலாம்.
விண்வெளியின் தீவிர நிலைமைகளைத் தாங்கும் திறன் மனித உடலுக்கு கிடையாது. அதுமட்டுமில்லாமல் விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது. இதனால் விண்வெளி வீரர்களின் உடல் நிலையில் நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
விண்வெளியில் அடிபட்டால் இரத்தம் என்ன நிறத்தில் வரும் என்று தெரியுமா
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், விண்வெளியில் மைக்ரோ ஈர்ப்பு விசையின் வளிமண்டலம் உள்ளது. அதாவது விண்வெளி வீரர்கள் பூமியை விட 89 சதவீதம் குறைவான ஈர்ப்பு விசையில் இருப்பார்கள். இதன் காரணமாக அவர்கள் எப்போதும் எடை இல்லாத நிலையை உணர்கிறார்கள். அதனால் விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எப்போதுமே மிதந்து தான் செல்ல வேண்டும்.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் அவர்களின் தசை மற்றும் எலும்புகள் அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை. இதனால் விண்வெளி வீரர்களின் தசை மற்றும் எலும்பு தனது இயல்பு நிலையை இழக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக தான் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய பின் விண்வெளி வீரர்கள் நடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா |
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |