விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது தெரியுமா..?

Why Is Space Dark in Tamil

Why Is Space Dark in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். பொதுவாக நம் அனைவருக்குமே விண்வெளிக்கு செல்ல வேண்டும், வானத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற பல ஆசைகள் இருக்கும். ஆனால் அது எல்லாருக்கும் நிறைவேறுமா என்றால் அது கேள்வி தான். அப்புறம் எப்படி தான் நாம் விண்வெளியில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வது என்று கேட்பீர்கள். அதற்கு தான் எங்கள் Pothunalam.Com பதிவு உள்ளதே. தினமும் இந்த பதிவில் விண்வெளியில் நடக்கும் சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா

விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது..? 

விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது
 

நம் அனைவருக்குமே மனதில் பல கேள்விகள் இருக்கும். அப்படி இருக்கும் கேள்விகள் இதுவும் ஓன்று. விண்வெளி இருட்டாக இருக்குமா இல்லை வெளிச்சமாக இருக்குமா என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கிறது.

காரணம் விண்வெளியில் தானே சூரியன், நிலா எல்லாம் இருக்கிறது. அப்படி என்றால் வெளிச்சமாக தானே இருக்கும் அப்படி என்று கூறுவீர்கள். இன்னும் சிலர் பூமியில் இருந்து வானத்தை பார்க்கும் போது அது நீல நிறமாக தானே உள்ளது என்று சொல்வீர்கள்.

ஆனால் விண்வெளியில் வெளிச்சம் கிடையாது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று இங்கு பார்ப்போம்.

ஒரு மனிதன் விண்வெளியில் எத்தனை வினாடிகள் வரை உயிர்வாழ முடியும்

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் வளிமண்டலத்தை விட்டு வெளியேறும்போது, ​​விண்வெளியில் கருப்பு நிறம் அதாவது இருட்டு அவர்களை சூழ்ந்து விடுகிறது என்று கூறுகிறார்கள்.

 பொதுவாக விண்வெளியில் சூரியன் அல்லது சந்திரனில் ஒளியை சிதறடிக்கும் வளிமண்டலம் இல்லை. அதனால் சூரியனிலிருந்து வரும் ஒளியானது சிதறாமல் ஒரு நேர்கோட்டில் பயணிக்கிறது. அதன் காரணமாக நாம் சூரியனை நோக்கிப் பார்த்தால், ஒரு பிரகாசமான வெள்ளை ஒளியை மட்டுமே நம்மால் காணமுடியும். அதுவே விலகி மற்ற இடங்களை பார்க்கும்போது இருள் சூழ்ந்து காணப்படும்.  

அதனால் தான் விண்வெளி இருட்டாக இருக்கிறது என்று விண்வெளி ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் 

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science