Udarkalvi Endral Enna in Tamil
வணக்கம் நண்பர்களே.. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அதேபோல், இப்பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றினை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். நாம் அனைவருமே உடற்கல்வி என்பதை கேள்வி பட்டிருப்போம். ஆனால், உடற்கல்வி பற்றிய முறையான விவரம் பற்றி தெரிந்திருக்க மாட்டோம். ஆகியால் இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் உடற்கல்வி என்றால் என்ன.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கல்வி முறைகளில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்று தான் உடற்கல்வி. உடற்கல்வி என்பது உடலையும் அறிவையும் பேணக்கூடிய கல்வியாக இருக்கிறது. ஆகையால், உடற்கல்வி பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உடற்கல்வி என்றால் என்ன.?
உடற்கல்வி என்பது அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் பாடம் ஆகும். இது, உடலுக்கான கல்வி கல்வி ஆகும். அதாவது, உடல் மூலமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி ஆகும். இதன் மூலம், உடல் நலம், பலம் மற்றும் வளம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். உடல்நலம் மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதற்கான விளையாட்டு என்று கூறினால் பெரும்பாலனவர்களுக்கு நன்கு புரியும். உடற்கல்வி என்பதை ஆங்கிலத்தில் Physical Education (PE) என்று கூறுவார்கள்.
இதில், கால்பந்து, வலைப் பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், துடுப்பாட்டம், பந்தயம் மற்றும் குழந்தைகளுக்கான பல விளையாட்டுகள் அடங்கும். முக்கியமாக, உடற்கல்வி என்பது தனித்திறமையை வளர்க்கவும், உடல் வளத்தை உயர்த்தி கொள்ளவும், ஓய்வு நேரத்தை பயன்பாட்டுடன் செலவழிக்கவும் பயன்படுத்தக்கூடிய முறை ஆகும்.
விளையாடுவதால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா
உடற்கல்வி முக்கியத்துவம்:
உடல் ஆரோக்கியம்:
- சரியான உடற்பயிற்சிகள் மூலம் உடல் நலன் மேம்படும்.
- தசை பலம், இடை எடை கட்டுப்பாடு மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்.
மனநலம்:
- உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும்.
- மன உறுதி மற்றும் மனச்சோர்வை போக்கும்.
குழு ஒத்துழைப்பு:
- குழு விளையாட்டுகள் மூலம் திறமையான இணக்கப்பாடும், ஒத்துழைப்பும் வளர்க்கப்படும்.
வினைத்திறன்:
- கணிசமான உடற்பயிற்சிகள் உடலின் வினைத்திறன் (Reflex) மற்றும் வேகத்தை மேம்படுத்தும்.
சுய கட்டுப்பாடு:
- உடற்கல்வி மூலம் ஒழுக்கம், நேர்ப்படத்தன்மை மற்றும் மனநிலை கட்டுப்பாடு வளர்க்கப்படுகிறது.
ஆயுட்காலம் முழுவதையும் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான திறன்களைக் கற்பித்து கொடுப்பதற்கான ஒரு கல்வி முறை ஆகும். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு உடற்கல்வி கற்று கொடுப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வளருவார்கள். அதுமட்டுமில்லாமல், உடற்கல்வி மூலம் ஒவ்வொரு விளையாட்டின் விதிமுறைகலையும் , நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழியாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி என்பது எப்படி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறதோ அதேபோல், ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற் கல்வி அவசியமான ஒன்று ஆகும். உடற்கல்வியின் அவசியத்தை அறிந்தே அணைத்து பள்ளிகளிலும் Physical Education Teacher (PET) ஒருவர் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |