உலக கோப்பை அணியில் வாய்ப்பை இழந்த வீரர்கள்
சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 icc கோப்பை வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி கோலாகலமாக நடக்கவிருக்கிறது. பொதுவாக உலகக்கோப்பை என்பது சாம்பியனை மட்டும் தீர்மானிக்காமல் அவர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்த வீரர்களை அறிவித்துள்ளது. யார் யார் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
உலக கோப்பை அணியில் வாய்ப்பை இழந்த வீரர்களின் லிஸ்ட்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்து உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ipl-லில் வெற்றிகளை பெற்றிருந்தாலும் இதுவரை odi பேக்அப் தொடக்க ஆட்டக்காரராகக் காணப்படவில்லை, அங்கு அவர் தனது தீவிர ஆக்ரோஷமான பேட்டிங்கை வரிசையின் உச்சியில் காட்டினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் விளையாட்டிற்கான அட்டவணை 2023..!
ருதுராஜ் கைக்வாட்:
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ருதுராஜ் கைக்வாட் அறிமுகமாகி சுமாராக விளையாடினாலும் உலகக்கோப்பை அணியில் பேக் அப் தொடக்க வீரராக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் முதன்மையானவர்களாவும் இஷான் கிசான் பேக்-அப் வீரராகவும் தேர்வு செய்யப்படுவார்கள் அவருக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.
வாஷிங்டன் சுந்தர்:
2011 உலக கோப்பையில் விளையாடுவதற்கு வாஷிங்டன் சுந்தர் தகுதியானவர் என்று முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் புகழ்ந்தார். அடிக்கடி காயம் ஏற்பட்டு முழுமையாக விளையாடாமல் இருக்கும் அவரை உலக கோப்பையில் நீக்குவதற்கு தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
அர்ஷிதீப் சிங்:
அர்ஷிதீப் சிங் 2022 t20 உலக கோப்பையில் தேர்வாகி அதிக விக்கெட்டுகளை எடுத்து இந்திய பவுலராக சாதனை படைத்தார். அர்ஷிதீப் சிங் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக வாசிம் அக்ரம் போல அசத்துவதாக முன்னாள் வீரர்களின் பாராட்டுகளையும் பெற்றார். இருந்தாலும் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடியதில் நோபலை போட்டதால் தேர்வுக்குழு உலக கோப்பையில் இருந்து அர்ஷிதீப் சிங்கை புறக்கணிக்கிறது.
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |