2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வுபெறும் 5 இந்திய வீரர்கள்

Advertisement

உலக கோப்பையுடன் ஓய்வு பெற போகும் 5 இந்திய வீரர்கள்

icc உலக கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 5-ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. பொதுவாக உலகக் கோப்பை என்பது சாம்பியனை மட்டும் தீர்மானிக்காமல் பல வீரர்களின் வாழ்வையும் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அதாவது நாட்டுக்காக விளையாடும் பல வீரர்கள் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பையை மையப்படுத்தி தங்களுடைய வயது மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை கணக்கிட்டு ஓய்வு முடிவை பற்றி அறிவிப்பார்கள். அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுபவர்கள் யார் யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..

ஷிகர் தவான்:

உலக கோப்பையுடன் ஓய்வு பெற போகும் 5 இந்திய வீரர்கள்

ஷிகர் தவான் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபியில் தோனியின் முடிவால் நிரந்தர ஆரம்ப வீரராக தங்க பேட் விருதை வென்று இந்திய கோப்பையை வென்றவர். அடுத்து 2017 ஆம் ஆண்டும் தங்க பேட் விருது வென்று 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறினார்.

ஆனால்  தற்போது சுப்மன் கில், இசான் கிசான் போன்ற இளம் வீரர்கள் வந்து விட்டனர். அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவதுடன் 37 வயதை கடந்த இவர் 2027 உலக கோப்பையுடன் விட பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மா:

உலக கோப்பையுடன் ஓய்வு பெற போகும் 5 இந்திய வீரர்கள்

2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து சாதனை படைத்த அவர் சமீப காலங்களாகவே ஹிட்மேன் என்ற தன்னுடைய பெயருக்கேற்றார் போல் அல்லாமல் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பேட்டிங்கிலும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் 36 வயதாவதால் நிச்சயமாக 2027 உலகக்கோப்பையில் 40 வயதில் விளையாட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை

விராட் கோலி:

உலக கோப்பையுடன் ஓய்வு பெற போகும் 5 இந்திய வீரர்கள்

அக்டோபரில் 35 வயதை தொடுவதற்காக காத்திருக்கும் அவர் 2027-இல் 39 வயதில் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. சொல்லப்போனால் குறிப்பிட்ட வயதிற்கு பின் ஏதோ ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவேன் என்று அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதனால்  ஒருநாள் கிரிக்கெட்டில் 2023 உலக கோப்பைக்குப்பின் விடை பெறுவார் என்றே சொல்லலாம்.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

உலக கோப்பையுடன் ஓய்வு பெற போகும் 5 இந்திய வீரர்கள்

 

இவருக்கு நிறைய இளம் வீரர்கள் போட்டிகளில் இருக்கின்றனர். 37 வயதாகும் அவர் இந்த உலகக் கோப்பைக்கு பின் அதிகாரப்பூர்வமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடும் முடிவை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஜஸ்பிரித் பும்ரா:

உலக கோப்பையுடன் ஓய்வு பெற போகும் 5 இந்திய வீரர்கள்

இவருக்கு 29 வயது தான் ஆகின்றது. ஆனாலும் இவர் விளையாட்டில் அதிக காயம் ஏற்படுகிறது.  தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் 2023 உலகக்கோப்பையில் பங்கேற்பாரா என்பதே சந்தேகமாக உள்ளது.  எனவே ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள அவர் 2 உலக கோப்பைக்கு நடுவே முக்கியமற்றதாக நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் காலத்தின் கட்டாயத்தால் விடைபெற்று டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.

முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 5 இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement