Asia Cup 2023 Player List
2023 ஆசியக் கோப்பையில் மொத்தம் 13 போட்டிகளில் 6 அணிகள் விளையாடுகின்றனர்.அவற்றில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. இந்திய அணி 2016 மற்றும் 2018ல் ஆசிய கோப்பை பட்டங்களை தொடர்ச்சியாக வென்றது. இந்தியாவிற்காக MS தோனி 2016 மற்றும் ரோஹித் சர்மா 2018ல் ஆசியக் கோப்பைப் பட்டங்களை தொடர்ச்சியாக வென்றனர். கடந்த சீசனில் 20 ஓவர் வடிவத்தில் UAE இல் நடைபெற்ற போட்டியின் சாம்பியன்களாக இலங்கை இருந்தது. இந்த ஆண்டு போட்டியை வெல்லும் விருப்பமான அணிகளில் இந்தியாவும் ஒன்று. சமீப காலங்களில் வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டுகிறது. ஆசிய கோப்பை என்பது இந்தியா ஆதிக்கம் செலுத்தும் தொடர்களில் ஒன்றாகும். ஏழு முறை பட்டத்தை வென்ற இந்திய அணி இந்த முறையும் பட்டத்தை வெல்லும் முனைப்பு உடன் செயல்படும். இந்திய அணியில் விலையடையுள்ள வீரர்கள் பட்டியலை தெரிந்து கொள்வோம் வாருங்கள்…
ஆசிய கோப்பை 2023 வீரர்கள் பெயர் பட்டியல் :
ஆசியக் கோப்பை 2023, உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் பிரியர்களும் மிகவும் எதிர்பார்க்கும் கிரிக்கெட் நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த Asian Cup Match-ல் 6 நாடுகள் பங்கேற்கிறது. Asia Cup 2023 மொத்தம் 13 போட்டிகள் நடைப்பெற உள்ளது. Asian Cup Match-ன் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபால் அணி வரும் ஆகஸ்ட் 30 அன்று பாகிஸ்தானின் முல்டானில் மோதுகிறது. இந்த ஆசியக் கோப்பை 2023 வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு நாடும் அறிவித்துவருகிறது. அந்த வகையில் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரத்தை பார்க்கலாம் வாங்க….
Asia Cup 2023 Team India Squad Announcement:
2023 Asain Cup Player List :
வீரர்களின் பெயர் | வீரர்களின் நிலை |
ரோஹித் சர்மா | கேப்டன்(பேட்ஸ்மேன்) |
விராட் கோலி | பேட்ஸ்மேன் |
சூர்யகுமார் யாதவ் | பேட்ஸ்மேன் |
ஷ்ரேயாஸ் ஐயர் | பேட்ஸ்மேன் |
கே.எல். ராகுல் | விக்கெட் கீப்பர் |
இஷான் கிஷன் | பேட்ஸ்மேன் |
திலக் வர்மா | பேட்ஸ்மேன் |
ஹர்திக் பாண்டியா | ஆல் ரவுண்டர் |
ரவீந்திர ஜடேஜா | ஆல் ரவுண்டர் |
அக்ஸர் பட்டேல் | ஆல் ரவுண்டர் |
ஷர்துல் தாக்கூர் | பௌலர் |
ஜஸ்பிரித் பும்ரா | பௌலர் |
முகமது ஷமி | பௌலர் |
முகமது சிராஜ் | பௌலர் |
குல்தீப் யாதவ் | பௌலர் |
பிரசித் கிருஷ்ணா | பௌலர் |
சஞ்சு சாம்சன் | ரிசர்வ் விக்கெட் கீப்பர் |
India Squad Asia Cup 2023:
ஆசியக் கோப்பைக்கான இந்தியாவின் 17 பேர் கொண்ட அணி – ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்)
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்களான, கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நட்சத்திர வீரர்கள் ஒரு இடைவேளைக்கு பின்னர் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.
2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று எண்ணிய முன்னணிவீரர்களுக்கு அணியில் இடமில்லை. மூத்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், ஆல் ரவுண்டர் அஷ்வின் ரவிச்சந்திரன், வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெறவில்லை. சாம்சன் ரிசர்வ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது போன்ற விளையாட்டு தொடர்புள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எண்கள் தளத்தை பின்தொடருங்கள்…
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் எப்போது தொடங்க போகிறது தெரியுமா..?
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |