பேட்மிண்டன் விளையாட்டை பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள்..!

Advertisement

Badminton Information in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பேட்மிண்டன் விளையாட்டை பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறவும்.

கைப்பந்து விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன..?

பேட்மிண்டன் விளையாட்டின் வரலாறு:

basic information of badminton 

பேட்மிண்டன் விளையாட்டு பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. பொதுவாக நாம் சிறுவயதில் பேட்மிண்டன் விளையாட்டை கட்டாயம் விளையாடி இருப்போம். அப்படி நாம் விளையாடிய பேட்மிண்டன் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பேட்மிண்டன் விளையாட்டு பூப்பந்து விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. பேட்மிண்டன் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் சியாம் என்ற நகரில் தோன்றியது. இது 1870 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு வரப்பட்டு டென்னிஸ் போல விளையாடப்பட்டது. பின் கனடாவில் விளையாடிய பிறகு, 1929 ஆம் ஆண்டு பேட்மிண்டன் அமெரிக்காவிற்கு வந்தது முதல் மிகவும் பிரபலமாக மாறியது. அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு முதல் பூப்பந்து ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக மாறியது.

அதுபோல இந்த பேட்மிண்டன் விளையாட்டு ஷட்டில்காக் என்றும் அழைக்கப்படுகிறது. ஷட்டில்காக் என்று சொன்னவுடன் நமக்கு இது என்ன விளையாட்டு என்று நியாபகம் வந்திருக்கும் அல்லவா..!

நீங்கள் நினைப்பது சரி தான். இந்த விளையாட்டு இருவர் பூ போன்ற பந்தை கீழே விடாமல் மாற்றி மாற்றி அடிக்கும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டின் விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

டென்னிஸ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா

பேட்மிண்டன் விளையாட்டின் விதிமுறைகள்:

பேட்மிண்டன் விளையாட்டின் விதிமுறைகள்

  • ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற, ஒரு வீரர் 21 புள்ளிகளை எட்ட வேண்டும். அதுபோல ஆட்டம் 20-20 என சமநிலையில் இருந்தால், நீங்கள் இரண்டு தெளிவான புள்ளிகளில் வெற்றி பெற வேண்டும்.
  • மேலும் உங்கள் அணியின் ஸ்கோர் 29-29 ஆக இருந்தால், 30 வது புள்ளியைப் பெறும் வீரர் அல்லது அணி இந்த விளையாட்டில் வெற்றி பெறுவார்கள்.
  • ஒரு பேட்மிண்டன் விளையாட்டை இரண்டு எதிரணி வீரர்கள் (ஒற்றையர்) அல்லது நான்கு எதிரணி வீரர்கள் (இரட்டையர்) விளையாடலாம்.
  • பூ பந்து (ஷட்டில் காக்) எதிராளியின் மைதானத்திற்குள் இறங்கும் போதும் அல்லது திரும்பிய ஷட்டில் காக் வலையைத் தாக்கினாலோ அல்லது மைதானத்திற்கு வெளியே தரையிறங்கினாலோ வீரர் புள்ளியை இழப்பார்.
  • அதுபோல் விதிகள் இரண்டாவது சேவைகளை அனுமதிக்காது. ஒரு வீரர் தனது உடலின் எந்தப் பகுதியையும் அல்லது ராக்கெட்டையும் வலையைத் தொட முடியாது.
  • மேலும் ஒரு வீரர் வேண்டுமென்றே எதிராளியை திசை திருப்பக்கூடாது. அதுமட்டுமில்லாமல் ஒரு வீரர் ஷட்டில் காக்கை இரண்டு முறை அடிக்க முடியாது.

இதையும் படியுங்கள்⇒ புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement