கைப்பந்து விளையாட்டு | Volleyball Rules in Tamil | வாலிபால் விதிமுறைகள்
பொதுவாக நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு திறன் இருக்கும். அதிலும் சிலருக்கு அந்த திறன் என்னென்ன என்று தெரிந்து இருக்கும். சிலருக்கு அத்தகைய திறன் என்னவாக இருக்கும் என்று சிந்தித்து கொண்டே இருப்பார்கள். இந்த திறன்களில் விளையாட்டும் ஒன்று. ஒரு இடத்தில் ஏதாவது ஒரு விளையாட்டு நடந்தால் போதும் அதில் என்ன நடக்கிறது என்று கற்றுக்கொள்ள வேண்டும் அப்போது தான் நாமும் கலந்து கொள்ள முடியும் என்ற ஆர்வம் உள்ள நபர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விளையாட்டு என்பது சாதாரணமானது கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு விளையாட்டிற்கு சில விதிமுறைகள் இருக்கும். அந்த விதிமுறைகளை நாம் சரியாக தெரிந்துக்கொண்டு அதனை பின்பற்றினால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். ஆகவே இன்று கைப்பந்து விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ கபடி விளையாட்டின் விதிமுறைகள்
Basic Rules of Volleyball in Tamil:
- கைப்பந்து விளையாட்டானது ஆறு ஆறு நபர்கள் கொண்ட இரு அணியாக பிரிந்து விளையாடுகிறது. இந்த விளையாட்டின் மைய பகுதி என்பது இரண்டு அணிக்கும் இடையில் இருக்கும் வலை ஆகும்.
- இந்த ஆறு வீரர்கள் முன்னும் பின்னுமாக பிரிந்து நிற்க வேண்டும். அதாவது 3 நபர் முன்பும் மற்ற 3 நபர் பின்புமாக நிற்க வேண்டும். இந்த விதிமுறையினை இரண்டு அணிகளும் பின்பற்ற வேண்டும்.
- ஒரு வீரர் மட்டும் பந்தினை இரண்டு முறை அடிக்க கூடாது. அதுபோல ஒவ்வொரு முறை பந்தினை அடிக்கும் போதும் அதற்கான மதிப்பெண் அந்த அணிக்கு அளிக்கப்படும்.
- ஒரு பந்து அடிக்கும் போது அந்த பந்தானது கோட்டை விட்டு வெளியே சென்றால் அது ஏற்றுக்கொள்ளப்படும்.
- அதுப்போல வீரர் அடிக்கும் பந்தானது அரங்கத்தில் ஏதாவது ஒரு கம்பி அல்லது வலை ஆகிய இடங்களில் பட்டால் அது Out என்று கூறப்படும்.
- பந்தினை அடிக்கும் போது கையில் எட்டாத அளவிற்கோ அல்லது மிகவும் உயரமான இடத்திற்கோ பந்து சென்றால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.
- கைப்பந்து விளையாட்டு வீரர் யாராக இருந்தாலும் கையினை மட்டுமே கொண்டு விளையாட வேண்டும். மற்ற உறுப்புகளை கொண்டு விளையாடினால் அந்த மதிப்பெண் ஏற்றுக்கொள்ளப்படாத.
- இத்தகைய கைப்பந்து விளையாட்டில் ஒரு வீரர் மற்றொரு வீரரிடம் இருந்து பந்தினை பறித்து அவரை தாக்க கூடாது. இது கைப்பந்து விளையாட்டின் சட்ட விரோதமான செயலாக கருதப்படுகிறது.
- கைப்பந்து விளையாட்டு விளையாடும் அரங்கில் நெட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அதனை முன் வரிசையில் உள்ள நபர்கள் மட்டுமே சரி செய்ய வேண்டும்.
- ஒரு அணி தொடர்ச்சியாக இரண்டு முறை பந்தை அடித்து அதன் பிறகு மூன்றாவது பந்தையும் அந்த அணியே அடித்தால் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.
- இந்த விளையாட்டில் குறைந்த பட்சம் 3 சுற்றுகளும் மற்றும் அதிகபட்சமாக 5 சுற்றுகள் வரையிலும் நடைபெறும்.
- கடைசியாக எந்த அணி அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறதோ அதன் அடிப்படையில் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.
இதையும் படியுங்கள்⇒ புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |