Basic Skills of Basketball
பொதுவாக நாம் வீட்டில் இருக்கும் நேரத்தில் நம்முடைய வேலையினை அனைத்தினையும் முடித்த பிறகு வேறு ஏதாவது விளையாட்டு அல்லது இதர செயல் திறன்களின் மீது ஆர்வத்தினை காண்பிப்போம். சிலர் அத்தகைய ஆர்வத்தினை பெரும் மதிப்பாக எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிறந்த சாதனையாளராக இருப்பார்கள். ஆனால் மற்ற சிலர் அத்தகைய விளையாட்டிற்கான அடிப்படை விதிகள் மற்றும் திறன்கள் என்ன என்பது பற்றி தெரியாமல் இருப்பதனால் அப்படியே விட்டு விடுகிறார்கள். அதனால் இன்று நமக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றாகிய கூடைப்பந்து விளையாட்டின் அடிப்படை திறன்கள் பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
கூடைப்பந்தாட்டம் என்றால் என்ன.?
கூடைப்பந்தாட்டம் என்பது மற்ற விளையாட்டுகளை போல் இல்லாமல் நம்முடைய உடல் உறுப்புகள் அனைத்தினையும் செயல்படுத்தி விளையாடக் கூடிய ஒரு விளையாட்டாக உள்ளது.
மேலும் இந்த விளையாட்டின் மைதானத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு திரும்பி வந்து கோல் அடிக்க வேண்டும். இத்தகைய இது கூடைப்பந்து விளையாட்டு ஆகும். இதற்கான ஆங்கிலப்பெயர் என்பது Basketball ஆகும்.
கைப்பந்து விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன
கூடைப்பந்தாட்டத்தின் அடிப்படை திறன்கள்:
- கூடைப்பந்து விளையாட்டில் ஒரு அணிக்கு 5 நபர்கள் என இரண்டு அணியாக பிரிந்து விளையாட வேண்டும்.
- அதேபோல் இந்த விளையாட்டின் அடிப்படை திறனாக நன்றாக குதித்தல், ஓடுதல் என இவற்றில் வல்லமை கொண்டவராகவும், எதிர் அணி வீரர்கள் பற்றிய சிறிய சிறிய விளையாட்டு யுக்திகளையும் அறிந்து இருக்க வேண்டும்.
- அதுமட்டும் இல்லாமல் பந்தினை கையாளும் போது மிகவும் கவனமாகவும் சுற்றி இருக்கும் வீரர்களை பற்றி அறிந்து அதற்கு ஏற்றவாறு கோல் போட வேண்டும்.
- இந்த விளையாட்டில் நீங்கள் கால்களை நகர்த்தும் திறனை பொறுத்து தான் உங்களுடைய வெற்றி என்பது அமையும். அதே சமயம் எதிர் அணியின் இதே திறனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
- உங்களுடைய கைக்கு பந்து வந்தாலும் இல்லை வரவில்லை என்றாலும் சரி ஒரு இடத்தில் நிற்காமல் மைதானத்தை நோக்கி உங்களுடைய ஓட்டம் என்பது இருக்க வேண்டும். அதுவே கையில் பந்து வந்துவிட்டால் ஷாட்களை எவ்வாறு எடுப்பது என்றும் பந்தினை எப்போது பாஸ் செய்ய வேண்டும் என்ற சிந்திக்கும் திறனும் இருக்க வேண்டும்.
- மேலே சொல்லப்பட்டுள்ள அடிப்படை திறன்கள் மட்டும் இல்லாமல் இது கூட்டமாக விளையாடும் ஒரு விளையாட்டு என்பதால் குழுவில் உள்ள ஒவ்வொருவருடன் கூட்டமைப்பு முறையில் திட்டமிட்டு நன்றாக பயிற்சி பெறுவது என்பது முக்கியமான ஒன்று.
- இத்தகைய அடிப்படை திறன்கள் மட்டும் இல்லாமல் மற்ற விதிமுறைகள் பற்றியும் தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்.
டென்னிஸ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |