குத்துச்சண்டை விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Boxing Rules And Regulations in Tamil 

பழமையான விளையாட்டுகளில் ஒன்றுதான் குத்துச்சண்டை. குத்துச்சண்டை என்பது இரு நபர்கள் சண்டையிடும் ஒரு  விளையாட்டு ஆகும். ஒரே எடையில் உள்ள இரு நபர்கள் கையுறை போன்ற பாதுகாப்பு அணிகலன்களை  கொண்டு கை முட்டிகளை மட்டும் பயன்படுத்தி சண்டையிடுவது குத்துச்சண்டை ஆகும். குத்துச்சண்டை விளையாட்டில் பல விதிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றித்தான் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். நாம் அனைவருமே குத்துச்சண்டையை பெரும்பாலும் சினிமாவில் தான் பார்த்து இருப்போம். அதனை பார்க்கும்போது இரு நபர்கள் சண்டையிடுகிறார்கள் என்றுதான் நமக்கு தெரியும். அதற்கு பின்னல் இருக்கும் விதிமுறைகள் பற்றி நமக்கு தெரியாது. எனவே, குத்துச்சண்டை விளையாட்டில் என்னென்ன விதிமுறைகள் இருக்கிறது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குத்துச்சண்டை போட்டியின் போது, அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்கள் எத்தனை குத்துக்களை வீசினார்கள் மற்றும் அவர்களின் குத்துச்சண்டை செயல்திறன் ஆகியவற்றை பொறுத்தே அவருக்கு வெற்றி கிடக்கிறது.

கபடி விளையாட்டின் விதிமுறைகள்

குத்துச்சண்டை விளையாட்டின் விதிமுறைகள்:

 குத்துச்சண்டை விதிமுறைகள்

  • அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியில் மொத்தம் 3 சுற்றுகள் இருக்கும். அதேபோல், தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் 9 முதல் 12 சுற்றுகள் வரை இருக்கும். ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும், போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வளையங்களின் மூளைக்கு சென்று 1 நிமிடம் அமர்ந்து அடுத்த சுற்றுக்கு தயாராகலாம்.
  • போட்டி தொடங்கும் முன், ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு மூலை வழங்கப்படும். போட்டி தொடங்கும்போது போட்டியாளர் மூலையில் இருந்து வளையத்திற்குள் நுழைவார்கள்.
  • இந்த இடைவேளையின் போது, அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளலாம், கையுறைகளை சரிசெய்து கொள்ளலாம்.
  • ஒவ்வொரு போட்டியாளரையும் நடுவர் நன்கு கவனித்து அவர்கள் நியாமாக விளையாடுகிறார்களாக என்று பார்வையிடுவார்கள்.
  • மூன்று பேர் கொண்ட ஒரு குழு போட்டியை மதிப்பாய்வு செய்து, போட்டியாளர்கள் அடித்த குத்துகள், தற்காப்பு மற்றும் நாக் அவுட் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகளை வழங்குகிறார்கள்.

குண்டு எறிதல் விளையாட்டிற்கான விதிமுறைகள் என்னென்ன..?

  • ஒரு குத்துச்சண்டை வீரர் தனது எதிரியை எளிதாக தரையில் வீழ்த்தினால் எளிதில் வெற்றி பெறுவார்.
  • நாக் அவுட் என்பது KO என்ற வார்த்தையின் சுருக்கமாகும். ஒரு வீரர் வளையத்தில் தட்டையாக படுத்திருக்கும் நிலையில் நடுவர் நாக் அவுட் கூறுகிறார். அந்த நேரத்தில் நடுவர் 10 -லிருந்து கவுண்ட் செய்ய ஆரமிக்கிறார். அந்நிலையில் குத்துச்சண்டை வ்வேறாய் கவுண்ட் டவுன் முடியும் வரை எழுந்து நிற்கவில்லை என்றால் போட்டியில் தோல்வியடைந்து விட்டார் என்பது அர்த்தம்.
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement