கில்லி விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரியுமா..?

Advertisement

Gilli Game in Tamil

பொதுவாக நம்முடைய வீட்டில் சிறு வயதினை விளையாட்டு வயது என்றும், விளையாட்டு பருவம் என்றும் அழைப்பார்கள். ஏனென்றால் அத்தகைய சிறு பருவத்தில் நமக்கு எது நல்லது, கெட்டது என்று தெரியாமல் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிறிய வயதில் இருக்கும் போதும் பெரும்பாலும் விளையாட்டு தனமும், நண்பர்களுடன் தினமும் விளையாட வேண்டும் என்ற எண்ணமும் தான் இருக்கும். அந்த வகையில் நாம் சிறு வயதில் இருக்கும் போது கபடி, கிரிக்கெட் மற்றும் கில்லி என இதுபோன்ற விளையாட்டினை தான் விளையாடுவோம். ஆனால் அந்த வயதில் எந்த விளையாட்டிற்கு என்ன விதிமுறைகள் என்ற விவரம் நமக்கு சரியாக தெரியாமல் இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு வளர்ந்த பின்பு இத்தகைய நிலை என்பது தெரியாமலே இருக்கிறது. அதனால் இன்று கில்லி விளையாட்டிற்கான விதிமுறைகள் என்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை

கிட்டிப்புள் விளையாட்டு:

கிட்டிப்புள் விளையாட்டு என்பது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறலாம். ஏனென்றால் தற்போது வரும் காலங்களில் இதனை யாரும் அதிகமாக விளையாடாமல் இருப்பதே காரணம் ஆகும்.

மேலும் இந்த விளையாட்டு 2 கூம்புகளை கொண்டு சிறியவர்கள் விளையாடும் விளையாட்டு ஆகும்.

கில்லி விளையாட்டு விதிமுறைகள்:

கிட்டிப்புள் விளையாட்டு

  • கிட்டிப்புள் விளையாட்டில் மொத்தமாக 2 அணிகள் இருக்கும். இதில் எந்த அணி டாஸினை வெளிக்கிறதோ அந்த அணி முதலில் ஆட்டத்தினை தொடங்கும்.
  • இத்தகைய விளையாட்டு விளையாடுவதற்கு 4 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு வட்டம் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது வரையப்பட்டிருக்கும்.
  • கில்லி விளையாட்டை பொறுத்தவரை 2 குச்சிகள் தேவைப்படும். மேலும் தண்டா எனப்படும் சிறிய குச்சி 2 அடி நீளமாகவும், கில்லி எனப்படும் பெரிய குச்சி 3 அங்குலமாகவும் இருக்க வேண்டும்.
  • இதில் ஒரு அணி விளையாட வேண்டும் மற்றொரு அணி பில்டிங் செய்ய வேண்டும். அதன் பிறகு யார் கில்லி அடிக்கப்போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் வட்டத்தினுள் நிற்க வேண்டும்.
  • விளையாட்டினை ஆரம்பம் செய்தவுடன் கில்லியை 2 கற்களுக்கு இடையேயான குழியில் வைக்க வேண்டும். கிட்டிப்புள் விளையாட்டில் முக்கியமானது என்றால் அது நாம் எவ்வளவு தூரம் கில்லியை அடிக்கிறோம் என்றும், எத்தனை முறை அடிக்கிறோம் என்பது தான் முக்கியமான ஒன்று.
  • பில்டிங் செய்யும் நபர்கள் ஆட்டக்காரர் அடிக்கும் கில்லியை பிடிக்க வேண்டும். கில்லியை பிடித்தால் தான் ஆட்டக்காரரை தோற்கடிக்க முடியும்.

கில்லி விளையாட்டு முறை:

முதலில் குழியில் அமைக்கப்பட்டிருக்கும் கில்லியை ஆட்டக்காரர் தட்டி விடுவார். அதன் பிராகி அது காற்றின் மேலே பறக்கும் போது மீண்டும் தண்டாவால் அடிப்பார்.

இதன் பிறகு கில்லி மேலிருந்து கீழே இறங்கும் போது தண்டவால் அத்தகைய தூரம் அளக்கப்படும். இவ்வாறு அளக்கும் போதும் கூடுதலான தூரம் இருக்கும் போது ஆட்டக்காரர் அணி மீண்டும் ஆட்டத்தினை தொடரலாம். மேலும் தாண்டாவின் தூரத்தை பொறுத்து தான் ரன்களின் எண்ணிக்கை அமையும்.

அதேபோல் ஆட்டக்காரர் அடிக்கும் கில்லி தூரம் குறைவாக விழுந்தாலோ அல்லது பில்டிங் அணியால் பிடிக்கப்பட்டாலோ ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும்.

ஆசியக் கோப்பை 2023 போட்டிக்கான 17 பேர் அணி அறிவிப்பு….பல மாதங்களுக்கு பிறகு காலத்தில் இறங்கும் 2 நட்சத்திர வீரர்கள்

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement