ICC Gives First Call for World Cup Team Selection in Tamil
நாம் அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிக மிக பிடிக்கும். அதனால் அதனை விளையாடுவது அல்லது விளையாடுவதை பார்ப்பது நமக்கு மிக மிக பிடிக்கும். அதிலும் குறிப்புக ஒரு சிலருக்கு ஒரு சில விளையாட்டு தான் பிடிக்கும். அப்படி பலருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று தான் கிரிக்கெட். அப்படி நம்மில் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக விளையாட்டுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் தான் கிரிக்கெட் விளையாட்டு பற்றிய ஒரு தகவல் தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து அது என்ன தகவல் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
WorldCup Team Selection in Tamil:
அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்து தற்போது 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் முற்றிலுமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதோடு ஒவ்வொரு நாளும் இந்த உலகக்கோப்பை தொடர் குறித்த முக்கிய செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது துவங்க இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளுக்கும் எச்சரிக்கை அளிக்கும் விதமாக முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சதுரங்க விளையாட்டு பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்
ஐசிசியின் எச்சரிக்கை:
அதாவது இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த அணிகளும் தயார்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என ICC கெடு வைத்துள்ளது.
எனவே விரைவில் அனைத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பார்கள் என்று அறியப்படுகிறது.
உலகக்கோப்பையில் இந்திய அணி:
அதேபோன்று இந்திய அணியானது செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் மட்டுமே பங்கேற்க உள்ளதால் அந்த இரண்டு தொடர்களை வைத்து மட்டுமே இந்திய அணி 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும் என்று கூறப்படுகிறது.
அத்தோடு மட்டுமில்லாமல் புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கும் அஜித் அகார்கர் எப்படிப்பட்ட வீரர்களை தேர்வு செய்வார் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவை போல மற்ற 9 அணிகளும் தங்களது அணியை எவ்வாறு அறிவிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது இதற்கான அட்டவணை
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |