ICC உலக கோப்பை தனது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதி சுற்றியில் அடுத்தது நுழையும் அணிகள்

Advertisement

ICC அரையிறுதியை உறுதி செய்யும் அணிகள் 

ODI ICC உலகக் கோப்பை தனது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு இந்த உலக கோப்பை மிக பெரிய சாறுகளாகவே உள்ளது. இந்திய இதுவரை விளையாடிய அனைத்து லீக் சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் பாதியில் சரிவில் இருந்தாலும் அடுத்த பாதியில் தங்களுக்கான இடத்தை பிடிப்பதில் முனைப்பாக உள்ளன. இப்படி ஒவ்வொரு அணிக்கும் இந்த உலக கோப்பை சற்று மறுபட்டதாகவே உள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டில் இந்திய வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மாற்ற 3 அணிகளுக்கான போட்டி தொடருகிறது. இன்றைய பதிவில் அடுத்த அணியாக அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகள் யாவை ? அவை தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.

ICC அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் அணிகள்:

ODI ICC உலகக் கோப்பையின் முதல் அணியாக இந்திய தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

ICC உலகக் கோப்பை, லீக் சுற்றுகளில் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஒரு அணி அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. ஒரு அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

பங்களாதேஷ் அணி தனது அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

மீதமுள்ள 8 அணிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து தவிர மாற்ற அனைத்து அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. மற்ற 8 அணிகளும் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள 2 முதல் 3 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.

இந்திய அணி 7 லீக் சுற்றுகளில் விளையாடி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

ICC அரையிறுதி வாய்ப்பு உள்ள அணிகள்:

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் அணிகள் ICC 2023

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா 7 லீக் சுற்றுகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 1 தோல்வி உடன் 12 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளது.

ரன் ரேட் பொறுத்தவரை இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளது.

மீதம் உள்ள 2 சுற்றுகளை இந்தியாவுடன் நவம்பர் 5 தேதியும் ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 10 தேதியும் மோதுகிறது.

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய 2 போட்டிகளில் 1 போட்டியில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். வெற்றி பெறாத பட்சத்தில் 12 புள்ளிகளுடன் அணியுடன் ரன் ரேட் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தால் அரையிறுதி வாய்ப்பை பெரும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 6 லீக் சுற்றுகளில் 4 லீக் சுற்றுகளில் வெற்றியுடன் 2 தோல்வியுடனும் 8 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.

அப்படி வெற்றிபெறாத பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 4 இடத்தில் உள்ளது.

தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய மீதமுள்ள 2 போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும்.

2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளுடன் இருக்கும் மற்ற அணிகளுடன் ரன் ரேட்டில் உயர்ந்து இருக்க வேண்டும். அல்லது 1 போட்டியில் தோல்வி ஏற்பட்டாலும் மாற்ற அணிகளின் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

மாற்ற அணிகலனை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்புகள் உள்ளது. அனைத்து அணிகளுமே தங்களின் மீதம் உள்ள லீக் சுற்றுகள் அனைத்திலும் நல்ல ரன் ரேட் உடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டி-20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு புதிய விதி..! ICC எடுத்த திடீர் முடிவு!

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports

 

Advertisement