ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் எப்போது தொடங்க போகிறது தெரியுமா..?

Advertisement

India Cricket Schedule Asia Cup 2023 

பொதுவாக விளையாட்டினை பொறுத்தவரை ஒரு அணியாக விளையாடுவதை விட இரண்டு அணிகள் பிரிந்து விளையாடுவதில் தான் அதிகமாக ஆர்வமும், சுவாரஸ்யமும் இருக்கும் என்பது பலருடைய கருத்து. அந்த வகையில் பார்த்தால் நிறைய விளையாட்டுகள் இத்தகைய முறையில் இருந்தாலும் கூட கிரிக்கெட்டினை தான் அதிகமாக விரும்புகிறார்கள். அதேபோல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு அணியின் மீது ஆர்வம் இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அத்தகைய அணி எப்போது விளையாட போகிறது என்ற அட்டவணை வெளியிட்டு தேதியினை தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ஆசிய கோப்பைக்கான ஆட்டம் எந்த தேதியில் தொடங்கி எப்போது முடியப்போகிறது என்ற விவரத்தினை பார்க்கலாம் வாங்க..!

அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை

2023 ஆசிய கோப்பை ஆட்டம்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்றால் நாம் அனைவரிடமும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் இரண்டு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஆட்டமானது மிகவும் அட்டகாசமாக இருக்கும் என்பது அனைவரின் கருத்து.

அந்த வகையில் பார்த்தால் இன்னும் கூடிய விரைவில் ஆசிய கோப்பைக்கான ஆட்டமானது தொடங்க உள்ளது. இத்தகைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் என 6 அணிகள் மோத உள்ளது.

இத்தகைய விளையாட்டு ஆனது ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம்  17-ஆம் தேதி அன்று முடிவடையும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதில் ஆரம்பத்தில் இரண்டு இரண்டு அணியாக மோதும் என்று அதில் முதலில் 2 இடம் பிடித்த அணிகள் சூப்பர் தகுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் சிறப்பான ஆட்டத்தை ஆடிய 2 அணிகள் இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யப்படும் என்றும், இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூடைப்பந்து விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரசியமான தகவல்கள் 

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement