India Tour of West Indies 2023 in Tamil
விளையாட்டு என்றாலே நாம் அனைவருக்குமே மிக மிக பிடிக்கும். அதிலும் குறிப்பாக நம்மில் பலருக்கும் கிரிக்கெட் என்றால் மிக மிக பிடிக்கும். அதனால் நமது இந்திய கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டினை பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே நமது இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள சில கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கின்றது. அதனை பற்றிய முழுவிவரங்களையும் இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது இதற்கான அட்டவணை
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம்:
இந்திய அணியானது கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. அடுத்து நமது இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.
அதாவது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.
சதுரங்க விளையாட்டு பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்
இந்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.
வரும் ஜூலை 12 ஆம் தேதி துவங்க இருக்கின்றது. அதற்கு முன்னதாக ஜூலை 5 மற்றும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
இந்திய அணியில் இடப்பெற்றுள்ள வீரர்கள்:
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறாத வேளையில் அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் ஜெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனட்கட் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அளவில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது ஜூலை 5 மற்றும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெற உள்ள பயிற்சி போட்டியில் தெரிந்துவிடும்.
இந்நிலையில் இந்த தொடரில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள 5 வீரர்களான சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், யாஷஸ்வி ஜெயஸ்வால், இஷான் கிஷன் மீது அனைவரது பார்வையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடைப்பந்து விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |