ஈட்டி எறிதல் விதிமுறைகள்
விளையாட்டு என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா.! சிறியவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விளையாட்டை விரும்புவார்கள். அது போல பள்ளி பருவத்தில் படிக்கும் போது விளையாட்டுக்கு யார் யார் சேருகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு பெயரை கொடுத்து விடுவோம். அதில் வெற்றி பெற வேண்டும் வேண்டுமென்றால் அந்த விளையாட்டை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் ஈட்டி எறிதல் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
ஈட்டி எறிதல் விதிகள்:
ஈட்டி எரிதலில் ஆண்களுக்கு ஈட்டியின் அளவானது 800 கிராம் எடையுடன், 2.60 மீட்டர் முதல் 2.70 மீட்டர் வரை இருக்கும் .
ஈட்டி எரிதலில் பெண்களுக்கு ஈட்டியின் அளவானது 600 கிராம் எடையுடன், 2.20 மீட்டர் முதல் 2.30 மீட்டர் வரை இருக்கும் .
ஈட்டியை எவ்வளவு தூரத்திற்கு எரிய வேண்டும்:
ஈட்டி எறிதல் விளையாட்டின் மைதாமானது 30 மீட்டர் முதல் 36.5 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்க வேண்டும். ஈட்டி எறிவதற்கான மையப்பகுதியில் இருந்து வளைவின் மூளை வரை 30 டிகிரி கொண்டதாக இருக்க வேண்டும்.
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை
ஈட்டி எறிதல் விளையாட்டு விதிகள்:
ஈட்டியை வீசும் போது ஈட்டியானது கையில் இருக்க வேண்டும்.
ஈட்டியை ஓடி வந்து வீசும் போது குறிக்கப்பட்டிருக்கும் கோட்டிற்கு முன்னரே எறிந்தால் அவை செல்லாது.
ஈட்டியை நம் தோள்பட்டைக்கு மேல் உள்ளவாறு வைத்து வீச வேண்டும்.
ஒவ்வொரு வீரருக்கும் ஈட்டியை வீசுவதற்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும்.
இந்த விளையாட்டில் ஈட்டியை வீசும் போது யார் அதிக தூரத்திற்கு வீசியுள்ளார்களோ அவர்களே போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார்.
ஈட்டி எரிதலில் கவனிக்க வேண்டியவை:
கையின் நடுப்பகுதியில் ஈட்டியை பிடிக்க வேண்டும்.
நேராக ஓட வேண்டும்.
நீங்கள் ஈட்டியை பிடித்திருக்கும் கைகளை நேராக தூக்கி எரிய வேண்டும்.
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |