காலாட்படை என்றால் என்ன

Advertisement

காலாட்படை என்றால் என்ன

உலக வரலாற்றில் பல செயல்களுக்காக பல போர்கள் நடைபெற்றது.  பண்டைய தமிழர்களின் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. இந்த நான்கு படைகளில் காலாட்படை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

காலாட்படை என்றால் என்ன:

காலாட்படை பிரித்து எழுதுக

பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையில் பெரிதும் பேசப்பட்டது அகம், புறம் எனப்படும் காதலும், வீரமும் ஆகும். இன்றைய இலக்கியங்களிலும், ஊடகங்களிலும் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக புற வாழ்வு காணப்படுகின்றது. புறவாழ்க்கை எனப்படும் வீரநிலை அக வாழ்க்கையிலிருந்தே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அக வாழ்விலுள்ள தனக்கான ஒன்றை மற்றவர்களால் அபகரிக்க முற்படும் நிலையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே புற வாழ்க்கை என்ற போர் முறை உதவியாக இருந்தது.

கால் + ஆள் + படை = காலாட்படை

பழங்காலத்தில் வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படையை தான் காலாட்படை என்று கூறுவார்கள். அதாவது அந்த காலத்தில் போருக்கு செல்வதற்கு குதிரை, யானை போன்ற எதுமே இல்லாத போது போருக்கு செல்வதற்கு காலால் நடந்து போருக்கு செல்வார்களாம்.

போர் சூழலில் போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தாது காலால் நடந்து மாந்தவலுவால் காவக்கூடிய படைக்கலங்களையும் எடுத்துச் சென்று சமராடும் படை காலாட்படை ஆகும்.

காலாட்படை என்பது கால்களால் நடந்து தாக்கும் படை தான் காலாட்படை ஆகும். அதாவது காலாட்படை என்பது கால்களால் நடந்து சென்று போரிடும் படை தான் காலாட்படை ஆகும். ஆரம்ப களங்களில் நூற்றுக்கணக்கான வேல் ஏந்திய காலாட்படை வீரர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, அணிவகுத்து செல்வர். போரில் இப்படையினரே முன் செல்வார்கள்.

இந்த காலாட்படையில் அவ்வப்பொழுது தேவைக்கு ஏற்றது போல் வீரர்களை சேர்ப்பார்கள். இந்த படையை மூன்று விதமாக கூறுவார்கள். அதாவது கூலிப்படை என்றும், இடங்கை படையென்றும், தூசுப்படை என்றும் கூறுவார்கள்.’

இந்த காலாட்படையை தரைப்படை என்றும் அழைப்பார்கள்.

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement