கோகோ விளையாட்டு | Kho Kho Game Rules in Tamil
வணக்கம் நண்பர்களே.! ஒவ்வொரு விளையாட்டிற்கு விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் கோகோ விளையாட்டில் உள்ள விதிமுறைகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம். கோகோ விளையாட்டு பாரம்பரியமான விளையாட்டு. பள்ளி பருவத்திலே கோகோ விளையாட்டை விளையாடுவோம். வாங்க இந்த விளையாட்டின் பற்றிய செய்திகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு விளையாட்டிற்கு ஒரு விதிமுறைகள் என்பது இருக்கும். அதனிப்படியே விளையாட்டு நடைபெறும். இதனால், ஒவ்வொரு விளையாட்டின் விதிமுறைகள் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், நீங்கள் கோகோ விளையாட்டு விதிமுறைகள் (Kho Kho Game Rules in Tamil) பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோ-கோ விளையாட்டின் அடிப்படை திறன் என்னென்ன தெரியுமா..?
கோகோ விளையாட்டு விதிமுறைகள்:
- கோகோ விளையாட்டில் செவ்வக மைதானமாக இருக்க வேண்டும். மைதானம் 29 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும்.
- கோகோ விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள் இருப்பார்கள். அதில் 9 வீரர்கள் விளையாடுவார்கள். அதில் 8 வீரர்கள் அமர்ந்திருப்பார்கள். 1 வீரர் மாற்று வீரராக இருப்பார்கள்.
- போட்டியை தொடங்குவதற்கு முன் நாணயத்தை சுற்றி எந்த அணி ஆட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்வார்கள். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு சுற்றுகள் நடைபெறும். ஒரு சுற்று 12 வினாடிகள் விளையாடப்படுகிறது.
- விளையாட்டில் அமர்ந்திருப்பவர்கள் எதிரெதிர் பக்கம் அமர்ந்திருப்பார்கள். துரத்துபவர் இன்னொருவருக்கு வாய்ப்பு வழங்குவதற்காக கோகோ என்று தொட்டு சொல்வார்கள்.
- துரத்தும் வீரர் மற்றொரு வீரை தொடுவதற்கு எடுத்து கொள்ளும் நேரம் எந்த அணி குறைந்த நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ ஹாக்கி விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியமா.?
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |