IPL ஆட்டத்தில் புதிய விதிகள் இது நல்லதா..? கெட்டதா..?

Advertisement

New Rules of Ipl 2023 Impact Player Rule in Tamil

தற்போது IPL தொடர்  நடந்து வருகிறது. இதில் CSK அணிக்கும், குஜராத் அணிக்கும் முதல் ஆட்டம் தொடங்கியது. அதிகளவு மக்கள் அனைவருமே கிரிக்கெட் பார்க்கக் ஆர்வமாக இருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு ஆட்டத்திலும் யார் இந்த தடவை கோப்பையை கைப்பற்ற போகிறது என்று கேள்வி எழுப்பாமல் கிரிக்கெட் பார்ப்பது  இல்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் இந்த விளையாட்டு என்று தனியாக ஒரு ரூல்ஸ் உள்ளது. இந்த வருடம் IPL தொடரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது புதிதாக ரூல்ஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அது என்ன தெரியுமா..?

New Rules of IPl 2023 Impact Player Rule in Tamil:

IPL தொடரில் Impact Player என்று அறிமுகம் செய்துள்ளார்கள். டாஸ்க் வென்ற அணியில் ஒவ்வொரு வீரரும் 11 வீரர்கள் இருப்பார்கள். இதை தவிர மற்ற 5 நபர்கள் கொண்ட பட்டியல் இருக்கும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முறையில் ஆட்டத்தில் 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், Impact விதிகளின் கீழ் 1 வீரர் களத்தில் இறங்க முடியாது. களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருக்கும்பட்சத்தில் மற்றொரு Impact வீரரை களத்தில் இறக்கிக்கொள்ளலாம் .

இதில் நடுவரிடம் தெரிவித்துவிட்டு விக்கெட் விழும்போதோ அல்லது பேட்ஸ்மேன் காயம் அடையும் போது பயன்படுத்தலாம். அதாவது 14 ஓவருக்கு முன்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்று வீரராக வெளியே செல்பவர் 4 ஓவர்களை வீசியிருந்தாலும் ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறையின் கீழ் உள்ளே வரும் வீரர் முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீச முடியும், பேட்டிங் செய்ய முடியும்.

எதிரணி விருப்பம்:

முதலில் டாஸ் வேற அணிகள் நடுவரிடம் அணியின் பட்டியலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த முறை புதிய விதிகளில் Impact வீரர்கள் இருக்கும்பட்சத்தில் விளையாடும் போதும் வீரர்களின் பட்டியலை கொடுக்கலாம். ஆனால் இதற்கு எதிர் அணிகள் விருப்பம் தெரிவிக்கவேண்டும்.

கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

தவறான பந்துக்கு:

cricket no ball rules

முன்பு நடுவர் சொல்லும் தீர்ப்புக்கு மறுப்பு கருத்துக்கள் தெரிவிக்க முடியாது. ஆனால் இந்த முறை நடுவரிடம் வைடு, நோ-பால் கருத்துகளை வைக்கலாம் முறையீடு செய்யலாம்.

விக்கெட் கீப்பர் நகர்ந்தால் போச்சி:

 new rules of ipl 2023 impact player rule in tamil

முன்பு ஆட்டத்தில் பேட்மேன் அடிப்பதற்கு நகர்ந்தால் அவர்களின் நகர்ந்தலை வைத்து பின் உள்ள விக்கெட் கீப்பர் நகர்வார். ஆனால் இப்போது அப்படி இல்லை. இனிமேல் விக்கெட் கீப்பர் இடத்தை விட்டு நகர கூடாது. அப்படி நகர்ந்தால் அதனை நடுவர் கண்டறிந்தால் அது டெக்பால் என்று அறிவிக்கலாம் அல்லது வைடு என்றோ, நோபால் என்றோ அறிவித்து ஒரு ரன்னை அபராதமாக விதிக்கலாம். இல்லையென்றால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்களை கொடுக்கலாம்.

நேரம் பொன்னானது:

கிரிக்கெடிலில் 20 ஓவர்களில் கொடுக்கப்பட்டுள்ள 90 நிமிடங்களில் வீசவேண்டும். ஒவ்வொரு ஓவரையும் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் வீசவேண்டும். அப்படி முடியவில்லை என்றால் வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் பதிலாக 4 பேர் மட்டுமே இருக்கவேண்டும்.

நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement