தடகள விளையாட்டின் ஒரு அங்கமான ரிலே ஓட்டத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு….

Advertisement

ரிலே ஓட்டம் 

நாம் அனைவருக்கும் விளையாட்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த விளையாட்டின் விதிமுறைகள் தெரியவில்லை என்றாலும் நாம் நமக்கான விதிமுறைகளை உருவாக்கி அந்த விளையாட்டை விளையாடுவோம். தெரு ஓரங்களில் நாம் விளையாடும் போட்டிகள் யாவும் நமக்கான விதிமுறைகளை நமே உருவாக்குவது தான். ஆனால் ஒரு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் என்றால் அதில் கண்டிப்பாக விதிமுறைகள் இருக்கும். நாம் என்ன தான் அந்த விளையாட்டு நமக்கு நன்றாக தெரியும் என்றாலும், விதிமுறைகள் தெரியவில்லை என்றால் தோல்விகள் ஏற்படும். தோல்விகளை தவிர்க்க விளையாட்டின் விதிமுறைகளை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் இன்று தடகள விளையாட்டின் ஒரு போட்டியான ரிலே ஓட்டத்தின் விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

ரிலே ஓட்டம்: 

relay race game rules

ஒரு தடகள விளையாட்டில் மிகவும் அனைவராலும் விரும்பக்கூடியது தொடர் ஓட்டம் எனப்படும் ரிலே ஓட்டம் தான்.

தடகள விளையாட்டில் குழுவாக செயல்பட்டு வெற்றியை தேடி தரும் விளையாட்டில் ரிலே ஓட்டமும் ஒன்று.

இந்த ரிலே ஓட்டம் பண்டைய கிரேக்கர்கள் உருவாக்கிய விளையாட்டு. நவீன உலகத்தில் ரிலே ரேஸ் என்பது தடகள போட்டிகளின் முக்கியமானது.

ரிலே ஓட்டத்தின் விதிமுறைகள்:

ஒலிம்பிக் மற்றும் பிற உலக தடகளப் போட்டிகளில், ரிலே ரேஸ் என்பது ஒரு ஸ்பிரிண்ட் பந்தயத்தில் நான்கு தடகள வீரர்கள் கொண்ட  குழு, தீர்மானிக்கப்பட்ட தூரத்தை சமமாக பிரித்து அந்த குறிப்பிட தூரத்தை ஓடி கடப்பதுவே.

இந்த ஓட்டத்தில் கடைசியாக ஓட்டுபவர்  ‘ ஆங்கர் ‘ என்று அழைக்கப்படுகிறார்.

ரிலேக்கள் 200மீ, 400மீ, 800 மீட்டர் போன்ற தூரங்களை கொண்டு நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக்கில் இரண்டு ரிலே பந்தயங்கள் உள்ளன. அதாவது

4×100மீ ( ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் கலப்பு.)

4×400மீ (ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் கலப்பு.)

4×100மீ தொடர் ஓட்டம்:

4×100 மீ தொடர் ஓட்டம் என்பது நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ரிலே குழு ஒவ்வொரு வீரரும் 100 மீ தூரம் ஒரு நியமிக்கப்பட்ட பாதையில் ஓடி கடக்க வேண்டும்.

ஒவ்வொரு தடகள வீரரும் ஓடும் போது ஒரு தடியடியை எடுத்து சென்று குழுவில் உள்ள அடுத்த தடகள வீரரிடம் ஒப்படைக்க வேண்டும்.

10மீ முன் அல்லது 10மீ பின்னர் அடுத்த வீரரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கும் போது எந்தவொரு வீரரும் தடியடியை கைவிட்டாலோ அல்லது ஒப்படைகைப்பட வேண்டிய பகுதிக்கு வெளியே ஒப்படைத்தலோ அந்த குழு தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

ஓட்டத்தை கடைசியாக முடிக்கும் ஓட்டப்பந்தய வீரர் பொதுவாக ஒரு அணியில் வேகமான ஓட்டப்பந்தய வீரராக இருப்பார்.

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement